Your hands have made me and fashioned me; Give me understanding, that I may learn Your commandments. Psalm 119:73.
Yes, it is our Father God’s hand that formed us.
Even while we were in our mother’s womb, He was watching over every tiny detail of our growth. He sent us into this world with a divine purpose. His desire is that we lean on Him and listen to His voice every moment of our lives.
It is a beautiful and humble prayer to ask God to give us a conscious heart and a willing mind to learn His commandments. Listening and reading His Word may be easy, but learning it deeply and putting it into practice requires the help of our Heavenly Father.
Only when we walk in His commands do we truly please Him. And in doing so, we bring delight to His heart. Isaiah 64:8 says: “But now, O Lord, You are our Father; We are the clay, and You our potter; And all we are the work of Your hand.”
Reflection: Am I truly leaning on the One who shaped my life, and am I allowing His voice to guide my thoughts and actions as I seek to follow His commands with a willing heart?
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். சங்கீதம் 119:73.
ஆம், நம்முடைய பிதாவாகிய தேவனுடைய கரமே நம்மை உருவாக்கியது.
நாம் தாயின் கர்ப்பத்திலிருந்தபோதே, நம்முடைய வளர்ச்சியின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு தெய்வீக நோக்கத்துடன் அவர் நம்மை இந்த உலகத்திற்கு அனுப்பினார். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் நாம் அவரைச் சார்ந்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
அவருடைய கட்டளைகளைக் கற்றுக்கொள்ள ஒரு விழிப்புள்ள இருதயத்தையும் விருப்பமுள்ள மனதையும் தரும்படி தேவனிடம் கேட்பது ஒரு அழகான மற்றும் மனத்தாழ்மையான ஜெபம். அவருடைய வார்த்தையைக் கேட்பதும் வாசிப்பதும் எளிதாக இருக்கலாம், ஆனால் அதை ஆழமாகக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு நம்முடைய பரலோகப் பிதாவின் உதவி தேவை.
நாம் அவருடைய கட்டளைகளில் நடக்கும்போது மட்டுமே அவரை உண்மையாகப் பிரியப்படுத்துகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், அவருடைய இருதயத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறோம்.
ஏசாயா 64:8 சொல்லுகிறது: “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.”
சிந்திக்க: தேவனுடைய கட்டளைகளை கீழ்ப்படிதலுள்ள இருதயத்துடன் பின்பற்ற நான் முயற்சிக்கும்போது, என்னுடைய எண்ணங்களையும் செயல்களையும், அவருடைய சத்தமானது வழிநடத்த அனுமதிக்கிறேனா?
Isaiah 64:8 says: “But now, O Lord, You are our Father; We are the clay, and You our potter; And all we are the work of Your hand.”
ReplyDeleteHelp us lord, only with help of Heavenly Father we will be able to lead a righteous life