"Blog Y2 570 - Anchored in Divine Purpose"

Deal with Your servant according to Your mercy, and teach me Your statutes. Psalm 119:124.

What a beautiful and humble prayer from the psalmist, one that we, too, should echo daily. God’s mercy is not like the fleeting or conditional mercy shown by people in the world. Human mercy may fail, falter, or fade, but the mercy of our God is steadfast and eternal. His mercy never lets us down.

Without His mercy, we would not be able to stand, let alone walk faithfully in this broken world. It is by His mercy that we are forgiven, sustained, and continually invited into a deeper relationship with Him. But the psalmist doesn’t stop at mercy; he asks to be taught God’s statutes. 

It’s not enough to simply receive God’s mercy; we must also hunger for His truth. Every day, our hearts and minds need to be shaped and directed by His Word. When we walk in the path He teaches, we are kept from stumbling. So today, let us ask God to deal with us according to His loving mercy, to hold us close, and to guide our every step. Psalm 119:17 says: “Deal bountifully with Your servant, That I may live and keep Your word.”

Reflection: Am I depending on God’s unfailing kindness to help me stand firm, and am I open to learning His ways so I can live steadily and grow daily?

உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். சங்கீதம்119:124.

சங்கீதக்காரனாகிய தாவீதிடமிருந்து எவ்வளவு ஒரு அழகான, தாழ்மையான ஜெபம், நாமும் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. தேவனின் இரக்கம் உலகத்தில் உள்ள மக்கள் காட்டும் தற்காலிக அல்லது நிபந்தனைக்குட்பட்ட இரக்கத்தைப் போன்றதல்ல. மனித இரக்கம் தோல்வியடையலாம், தடுமாறலாம் அல்லது மங்கலாம், ஆனால் நம் தேவனின் இரக்கம் உறுதியானது மற்றும் நித்தியமானது. அவருடைய இரக்கம் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை.

அவருடைய இரக்கம் இல்லாமல், இந்த உருக்குலைந்த உலகில் உண்மையாக நடப்பது ஒருபுறம் இருக்கட்டும், நம்மால் நிற்க முடியாது. அவருடைய இரக்கத்தினாலேயே நாம் மன்னிக்கப்படுகிறோம், ஆதரிக்கப்படுகிறோம், அவருடன் ஆழமான உறவுக்குள் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம். ஆனால் சங்கீதக்காரன் இரக்கத்துடன் நிற்கவில்லை; தேவனுடைய பிரமாணங்களைத் தனக்குக்குக் கற்பிக்கும்படியும் கேட்கிறான். 

தேவனின் இரக்கத்தைப் பெறுவது மட்டும் போதாது; அவருடைய சத்தியத்திற்காக நாம் ஆசையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், நமது இருதயங்களும் மனங்களும் அவருடைய வார்த்தையால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும். அவர் போதிக்கும் பாதையில் நாம் நடக்கும்போது, நாம் இடறலடையாமல் தடுக்கப்படுகிறோம். ஆகவே, இன்று, தேவனுடைய அன்பான இரக்கத்தின்படி நம்மை நடத்தவும், நம்மை நெருக்கமாக வைத்திருக்கவும், நமது ஒவ்வொரு அடியையும் வழிநடத்தவும் தேவனிடம் ஜெபிப்போம்.  சங்கீதம் 119:17 சொல்லுகிறது: “உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.”

சிந்திக்க: நான் உறுதியாக நிலைத்திருப்பதற்காக தேவனின் தவறாத தயையை சார்ந்திருந்து, தினமும் நான் சீராக வளரவும்,  என் நிலையான வாழ்விற்கும், அவர் வழிகளை கற்றுக்கொள்ள நான் திறந்த மனதோடிருக்கிறேனா?

 

Comments

  1. உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி - Amen

    ReplyDelete
  2. Yes lord ..teach us your statutes and give us your abundant grace and provision

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"