Hatred stirs up strife, But love covers all sins. Proverbs 10:12.
Hatred and love are opposites; they cannot coexist in the same heart. Where love is present, hatred must flee. Holding onto grudges and hatred is not only spiritually harmful but can also affect our physical health. A heart filled with bitterness becomes a place where empathy cannot function, and forgiveness becomes difficult.
But when our hearts are filled with love, everything begins to look different. We see people and situations through a positive and compassionate lens. Love brings healing, freedom, and unity.
Romans 5:5 reminds us, “…the love of God has been poured out in our hearts by the Holy Spirit who was given to us.” If the Holy Spirit takes control of our lives, love will overflow from within us. There will be no room left for hatred.
Let us ask our Father God to fill our hearts with His divine love. Let us pray that He removes all hatred, bitterness, and unforgiveness, and gives us the grace to see others the way He sees them, with compassion, mercy, and love. 1 Peter 4:8 says: “And above all things have fervent love for one another, for ‘love will cover a multitude of sins.’”
Reflection: Am I allowing love to fill my heart fully, pushing out bitterness and grudges? Do I let God’s Spirit guide me to see others with compassion and mercy, freeing me from hatred?
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். நீதிமொழிகள் 10:12.
வெறுப்பும் அன்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை; அவை ஒரே இருதயத்தில் சேர்ந்து வாழ முடியாது. அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு அகன்றுவிடும். பகைமையையும் வெறுப்பையும் பிடித்துக்கொள்வது ஆன்மீக பிரகாரமாக தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். கசப்பு நிறைந்த இருதயம், பச்சாதாபம் செயல்பட முடியாத இடமாக மாறி, மன்னிப்பை கடினமாக்குகிறது.
ஆனால் நம் இருதயங்கள் அன்பால் நிறைந்திருக்கும்போது, எல்லாம் வித்தியாசமாகத் தெரிய ஆரம்பிக்கும். மக்களை மற்றும் சூழ்நிலைகளை ஒரு நேர்மறையான மற்றும் இரக்கமுள்ள கண்ணோட்டத்தில் நாம் பார்ப்போம். அன்பு குணப்படுத்துதலையும், விடுதலையையும், ஒற்றுமையையும் கொண்டுவருகிறது.
ரோமர் 5:5 நமக்கு நினைவூட்டுகிறது, "ஏனெனில் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவன் நம் இருதயங்களில் தமது அன்பை ஊற்றினார்." பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தினால், அன்பு நமக்குள்ளிருந்து பெருகி வழியும். வெறுப்புக்கு இடமிருக்காது.
நம்முடைய இருதயங்களை அவருடைய தெய்வீக அன்பினால் நிரப்பும்படி நம் பிதாவாகிய தேவனிடம் கேட்போம். எல்லா வெறுப்பு, கசப்பு, மன்னிக்காத சுபாவம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, மற்றவர்களை அவர் பார்ப்பது போல - இரக்கம், மனதுருக்கம், அன்புடன் - பார்க்க நமக்கு கிருபை தரும்படி ஜெபிப்போம். 1 பேதுரு 4:8 சொல்லுகிறது: “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.”
சிந்திக்க: கசப்பையும் பகைமையையும் வெளியேற்றி, என் இருதயத்தை அன்பு முழுமையாக நிரப்ப நான் அனுமதிக்கிறேனா? மற்றவர்களை இரக்கத்துடனும் மனதுருக்கத்துடனும் பார்க்கவும், வெறுப்பிலிருந்து என்னை விடுவிக்கவும் தேவனுடைய ஆவியானவர் என்னை வழிநடத்த நான் அனுமதிக்கிறேனா?
Lord without you we cannot do anything .Give us a compassionate heart and fill us with love .
ReplyDelete1 Peter 4:8 says: “And above all things have fervent love for one another, for ‘love will cover a multitude of sins.’”