"Blog Y2 619 - "His Strength Works in Me"
Your God has commanded your strength; Strengthen, O God, what You have done for us. Psalm 68:28.
Our God is mighty and full of strength. On our own, we have no power, but because our Father is all-powerful, His strength is manifested through us. In our weakness, His power is made perfect (2 Corinthians 12:9). That’s why we must always remember who we are: “We are the children of the Most High, almighty God!”
He is not a distant King sitting on His throne, silently watching us suffer. No, He personally comes forward to fight on our behalf. Time and time again, He proves that He is greater than anything or anyone in this world. No weapon formed against us will succeed (Isaiah 54:17), because our strength is not our own; it is commanded by God Himself.
So at any moment, we can call upon Him. He is within us. And just like the psalmist, we too can pray: “Do it again, Lord, strengthen what You have begun in us!” Philippians 1:6 says: “Being confident of this very thing, that He who has begun a good work in you will complete it until the day of Jesus Christ.”
Reflection: Am I truly living with the awareness that I am a child of the Almighty, allowing His strength to be revealed through my weakness and trusting that He fights every battle on my behalf?
உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும். சங்கீதம்68:28.
நம்முடைய தேவன் சர்வவல்லமையும் பெலமும் நிறைந்தவர். சுயமாக நமக்கு எந்த சக்தியும் இல்லை, ஆனால் நம் பிதா சர்வ வல்லமையுள்ளவர் என்பதால், அவருடைய பெலன் நம்மூலம் வெளிப்படுகிறது. நம்முடைய பலவீனத்தில் அவருடைய சக்தி பூரணப்படுத்தப்படுகிறது (2 கொரிந்தியர் 12:9). அதனால்தான் நாம் யார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: "நாம் உன்னதமான, சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிள்ளைகள்!"
அவர் தமது சிங்காசனத்தில் அமர்ந்து, நாம் பாடுபடுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தூரத்து ராஜா அல்ல. இல்லை, அவர் நம் சார்பாகப் போராட தனிப்பட்ட முறையில் முன்வருகிறார். இந்த உலகில் எதைக் காட்டிலும் அல்லது யாரைக் காட்டிலும் அவர் பெரியவர் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். நமக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது (ஏசாயா 54:17), ஏனென்றால் நம்முடைய பெலன் நம்முடையது அல்ல, அது தேவனாலே கட்டளையிடப்பட்டது.
ஆகவே எந்த நேரத்திலும் நாம் அவரை நோக்கிக் கூப்பிடலாம். அவர் நமக்குள்ளேயே இருக்கிறார். சங்கீதக்காரனைப் போலவே நாமும் ஜெபிக்கலாம்: "மீண்டும் அதைச் செய்யும், கர்த்தாவே, நீர் எங்களிடத்தில் ஆரம்பித்ததை பெலப்படுத்தும்!" பிலிப்பியர் 1:6 சொல்லுகிறது: “நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”
சிந்திக்க: தேவனுடைய பலத்தை என் பலவீனத்தின் மூலம் வெளிப்படுத்த அனுமதித்து, அவர் என் சார்பாக ஒவ்வொரு போராட்டத்தையும் நடத்துவார் என்று நம்பி நான் சர்வவல்லவரின் பிள்ளை என்ற விழிப்புணர்வுடன் உண்மையிலேயே வாழ்கிறேனா?
Be our strength lord and fulfill the purpose and complete the work you have for us as on our own, we have no power, but because our Father is all-powerful, His strength is manifested through us. In our weakness, His power is made perfect (2 Corinthians 12:9). Your grace is sufficient for thee not our strength,might or deeds ! Amen !
ReplyDelete