"Blog Y2 455 - Embrace His Calling"

Now therefore, go, and I will be with your mouth and teach you what you shall say. Exodus 4:12.

        As children of God and ambassadors of Christ, our continued existence signifies that God has a unique purpose for each of us. He calls us to proclaim His Gospel and share His love with the world. Like Moses, we often make excuses, citing a lack of eloquence. However, if God calls us to His ministry, He will also equip us. Our placement in specific situations serves a special purpose. Let us humble ourselves and surrender to His will. Though we may feel unworthy, God is mighty and can use us for His glory. We are clay in His hands; let Him mold us for His divine purpose. 
        This passage encourages us to trust in God’s provision and step forward in faith, knowing He will provide the words and abilities needed to fulfill His calling. Matthew 10:19-20 says: “But when they deliver you up, do not worry about how or what you should speak. For it will be given to you in that hour what you should speak; for it is not you who speak, but the Spirit of your Father who speaks in you.”

Reflection: Am I willing to trust in God’s provision and step forward in faith, believing He will equip me with the words and abilities needed to fulfill His calling?

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத்திராகமம் 4:12.

         தேவனின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் தூதர்களாகவும், நாம் தொடர்ந்து இருப்பது நம் ஒவ்வொருவர் மேலும் தேவன் ஒரு தனி நோக்கத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. அவருடைய நற்செய்தியை அறிவிக்கவும், அவரது அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அவர் நம்மை அழைக்கிறார். நாமும் நம்மிடம் பேசும் திறமையில்லாததாகக் கூறி பல நேரங்களில் காரணங்கள் கூறுகிறோம். இருப்பினும், தேவன் தம்முடைய ஊழியத்திற்கு நம்மை அழைத்தால், அவர் நம்மையும் ஆயத்தப்படுத்துவார். நமக்கு கொடுக்கப்பட்ட விசேஷ சூழ்நிலைகள், ஒரு பிரத்யேக நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. நம்மைத் தாழ்த்தி அவருடைய சித்தத்திற்கு ஒப்படைப்போம். நாம் தகுதியற்றவர்களாக உணர்ந்தாலும், தேவன் வல்லமையுள்ளவர், அவருடைய மகிமைக்காக நம்மைப் பயன்படுத்த முடியும். நாம் அவர் கைகளில் களிமண்; அவர் தம்முடைய தெய்வீக நோக்கத்திற்காக நம்மை உருவாக்கட்டும்.
        இந்த பகுதி தேவனின் பரிபூரண ஊழியத்தில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தில் முன்னேறிச் செல்ல நம்மை ஊக்குவிக்கிறது. தேவன் நம்மை அழைக்கும் போது, அதற்குத் தேவையான வார்த்தைகளையும் திறமையையும் வழங்குவார் என்பதில் நம்பிக்கையுடன் நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். மத்தேயு 10:19-20 சொல்லுகிறது: “அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.”

சிந்திக்க: தேவன்  எனக்குக்  கொடுத்திருப்பவைகளை நம்பி, விசுவாசத்தில் முன்னேற நான் தயாராகி, அவருடைய அழைப்பை நிறைவேற்ற தேவையான வார்த்தைகளையும் திறன்களையும் எனக்கு  வழங்குவார் என்று நம்புகிறேனா?

 

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"