Be hospitable to one another without grumbling. 1Peter 4:9.
Hospitality is an expression of our love, a love that should overflow from our relationship with God. Without love, we cannot truly claim to be His children, for we are called to imitate our Heavenly Father. Every blessing we receive from God is not to be taken for granted; He blesses us so that we may be a blessing to others.
In this chaotic world, it’s essential to have a discerning spirit and seek God’s guidance in extending hospitality to our fellow believers in need. By doing so, we may even entertain angels without realizing it. May God fill us with His love and transform us to be more like Him, embodying His grace and compassion in all our interactions. Hebrews 13:2 says: “Do not forget to entertain strangers, for by so doing some have unwittingly entertained angels.”
Reflection: Am I showing hospitality as an overflow of God’s love in my life, and seeking His guidance to bless others with grace and compassion?
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். 1 பேதுரு 4:9.
விருந்தோம்பல் என்பது நம் அன்பின் வெளிப்பாடாகும், இந்த அன்பு தேவனுடனான நமது உறவிலிருந்து நிரம்பி வெளிப்பட வேண்டும். அன்பு இல்லாமல், நாம் உண்மையிலேயே தேவனுடைய பிள்ளைகள் என்று கூற முடியாது, ஏனென்றால் நமது பரலோக பிதாவைப் போல நாம் அன்பாக இருக்க அழைக்கப்படுகிறோம். தேவனிடமிருந்து நாம் பெறும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
இந்த குழப்பமான உலகில், தேவைப்படும் நம் சக விசுவாசிகளுக்கு தேவைகளை சந்திப்பதில் பகுத்தறிவு உணர்வுடன் இருந்து, தேவனின் வழிகாட்டுதலைத் தேடி உதவிகள் செய்வது அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை அறியாமலேயே தேவ தூதர்களைக்கூட உபசரிக்கக் கூடும். தேவன் தனது அன்பால் நம்மை நிரப்பி, நம்மை அவரைப் போல மாற்றி, எல்லா உறவுகளிலும் அவரது கிருபையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த உதவுவாராக. எபிரெயர் 13:2 சொல்லுகிறது: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.”
சிந்திக்க: நான் தேவனுடனான எனது நிறைவான அன்பின்படி என் வாழ்க்கையில் மற்றவர்களை உபசரிக்கவும் தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்துடன் ஆசீர்வதிக்கவும் அவருடைய வழிகாட்டுதலைத் தேடுகிறேனா?
Comments
Post a Comment