"Blog Y2 458 - Guided by God's Faithfulness"

O God, You have taught me from my youth; and to this day I declare Your wondrous works. Psalm 71:17

        Our Lord, our God, is our loving Heavenly Father. His eyes were fixed on us even when we were in our mother’s womb. From the very beginning, He has watched every step we’ve taken. Whether we realized it or not, He guided us and instructed us because He had chosen us.
        We are incredibly precious in His sight. His care for us didn’t stop when we were young. Even as we grow older, He remains our faithful Teacher. He continues to shape and guide us for one ultimate purpose: to proclaim His wondrous works and glorify His name.
        We are called to praise, worship, and proclaim the wonders of His grace and power to the world. May we dedicate our lives to declaring His greatness and fulfilling the purpose for which we were created: glorify His name and share His love with others. Psalm 9:1 says: “I will praise You, O Lord, with my whole heart; I will tell of all Your marvelous works.”

Reflection: Am I recognizing God’s guidance and instruction throughout my life and faithfully proclaiming His wondrous works to glorify His name?

தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். சங்கீதம்  71:17.

        நமது கர்த்தராகிய, தேவன், நம் அன்புமிக்க பரம தகப்பன் ஆவார். நாம் தாயின் கருவில் இருக்கும்போதே அவரது கண்கள் நம் மீது நிலைத்திருந்தன. ஆரம்பத்திலிருந்தே, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவர் கவனித்து வருகிறார். நாம் அதை உணர்ந்தோமோ இல்லையோ, அவர் நம்மைத் தேரிந்தெடுத்து, வழிநடத்தி, அறிவுறுத்தினார்.
        அவருடைய பார்வையில் நாம் மிகவும் விலைமதிப்பற்றவர்கள். நாம்  சிறுவர்களாக இருந்தபோது அவர் நம் மீது காட்டிய அக்கறை நின்றுவிடவில்லை. நாம் பெரியவர்களாக வளர்ந்தாலும், அவர் நமக்கு உண்மையுள்ள போதகராக இருக்கிறார். அவர் செய்த அதிசய கிரியைகளை அறிவிக்கவும், அவரது நாமத்தை மகிமைப்படுத்தவதுமான இறுதி நோக்கத்திற்காக அவர் தொடர்ந்து நம்மை சரிப்படுத்தி வழிநடத்துகிறார்.
        தேவனை, நாம் துதித்து  ஆராதித்து, அவரது கிருபையையும் சக்தியையும் உலகிற்குச் சாட்சி அளிக்க அழைக்கப்படுகிறோம். அவருடைய மகத்துவத்தை அறிவிப்பதற்கும், நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்கும், அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போமாக. சங்கீதம் 9:1 சொல்லுகிறது: “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.”

சிந்திக்க: என் வாழ்கையில் தேவனின் வழிகாட்டுதலையும் அறிவுறுத்தலையும் நான் அங்கீகரித்து, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த அவருடைய அற்புதமான கிரியைகளை உண்மையுடன் அறிவிக்கிறேனா?



 

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"