"Blog Y2 461 - Let Praises Unlock Miracles"
Sing praises to God, sing praises! Sing praises to our King, sing praises! Psalm 47:6.
Praise is not just an action but a response—a natural outpouring of our love, gratitude, and reverence for our Creator. It reminds us of His greatness and reorients our hearts toward His majesty. Praise has the power to break spiritual chains. As Paul and Silas sang hymns in prison, the foundations of the jail were shaken, and they were set free (Acts 16:25-26). When we praise God in faith, we invite His divine intervention and open the door for miracles. Praise strengthens our spirit. It lifts us out of despair and fills us with joy and peace that surpasses all understanding (Philippians 4:7). It shifts our focus from earthly troubles to the eternal hope we have in Christ Jesus.
We praise Him not because of what He does but because He is holy, righteous, and faithful. As the psalmist declares, “Great is the Lord, and greatly to be praised; His greatness is unsearchable” (Psalm 145:3). Let us never withhold our praise, for even the heavens declare the glory of God (Psalm 19:1). If we remain silent, the rocks, His creation will cry out in our place (Luke 19:40).
Let our lives, words, and deeds be a song of praise to our King. Hallelujah, Amen! Psalm 100:4 says: “Enter into His gates with thanksgiving, and into His courts with praise. Be thankful to Him, and bless His name.”
Reflection: Am I offering heartfelt praise to God as a response to His greatness, inviting His presence into my life, and focusing on His eternal hope rather than my earthly troubles?
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். சங்கீதம் 47:6.
துதிப்பது என்பது ஒரு செயல் அல்ல, ஆனால் அது நம் உள்ளத்தில் இருந்து பொங்கி வரும் மகிழ்ச்சியாகும் - நமது சிருஷ்டிகருக்கு நமது அன்பு, நன்றியுணர்வு மற்றும் பயபக்தியின் இயல்பான வெளிப்பாடு. இது அவரது மகத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறதுமன்றி அவரது மகத்துவத்தை நோக்கி நமது இருதயங்களை திருப்புகிறது. துதிக்கு ஆவிக்குரியகட்டுகளை உடைக்கும் சக்தி உண்டு. பவுலும் சீலாவும் சிறையில் துதித்து, பாடல்களைப் பாடியபோது, சிறைச்சாலையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் (அப்போஸ்தலர் 16:25-26). நாம் விசுவாசத்தில் தேவனைத் துதிக்கும்போது, தேவனுடைய தெய்வீகத்தை நம்மிடம் இடைப்பட வரவழைத்து, அற்புதங்களுக்கான கதவைத் திறக்கிறோம். துதி நம் ஆவியை பலப்படுத்துகிறது. அது நம்மை விரக்தியிலிருந்து உயர்த்தி, எல்லாப் புத்திக்கும் மேலான மகிழ்ச்சியாலும் சமாதானத்தாலும் நம்மை நிரப்புகிறது (பிலிப்பியர் 4:7). இது பூமிக்குரிய பிரச்சனைகளிலிருந்து கிறிஸ்து இயேசுவில் நாம் வைத்திருக்கும் நித்திய நம்பிக்கையை நோக்கி நம் கவனத்தை மாற்றுகிறது.
அவர் செய்கிற காரியங்களை வைத்து நாம் அவரைத் துதிக்கவில்லை, ஆனால் அவர் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், உண்மையுள்ளவர் என்பதினால் அவரைத் துதிக்கிறோம். சங்கீதக்காரன் சொல்லுகிறபடி, "கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது." (சங். 145:3). வானங்கள் கூட தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறபடியால், நாம் ஒருபோதும் நம்முடைய துதியை நிறுத்தாதிருக்கக்கடவோம் (சங். 19:1). நாம் மவுனமாயிருந்தால், நமக்குப் பதிலாக அவருடைய கிரியைகளாகிய கற்கள் கூட அவரைக் கூப்பிடும் (லூக்கா 19:40).
நம் வாழ்வும், சொல்லும், செயல்களும் நம் ராஜாவை துதிக்கும் பாடலாக இருக்கட்டும். அல்லேலூயா, ஆமென்! சங்கீதம் 100:4 சொல்லுகிறது: “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.”
சிந்திக்க: தேவனுடைய மகத்துவத்தை உள்ளத்தில் உணர்ந்து தேவனுக்கு இருதயப்பூர்வமான துதியை ஏறெடுத்து, அவருடைய பிரசன்னத்தை என்னிடம் பெற்று, என்னுடைய பூமிக்குரிய பிரச்சனைகளை விட அவருடைய நித்திய வாழ்வில் கவனம் செலுத்துகிறேனா?
Comments
Post a Comment