"Blog Y2 462 - Fix Your Eyes on Jesus"
But it is good for me to draw near to God; I have put my trust in the Lord God, That I may declare all Your works. Psalm 73:28.
When we observe the world and its fleeting power, it’s easy for our hopes to waver. Just as Peter’s faith faltered when he focused on the wind and the waves instead of Jesus, we too can stumble when our eyes are distracted by the challenges around us. However, the moment Peter cried out for help, Jesus reached out, lifted him up, and together they walked on the water before stepping into the boat.
This reminds us of an essential truth: when we fix our eyes on Jesus, He becomes our unshakable foundation—our strength, our hope, and our all. Drawing near to God and placing our trust in Him transforms our lives. As today’s verse declares, it is good for us to draw near to God because He is our refuge, our safest place of security.
In a world that often pulls us in many directions, we must intentionally seek God’s presence, for without Him, we are powerless. Just as we cannot move a single step without His grace, so too we cannot face life’s storms without His strength. When we surrender our lives fully to Him, trusting in His wisdom and love, He takes control and guides our steps.
Let us choose to draw near to God, making Him our refuge and strength. In doing so, we will not only find peace and stability but also the joy of declaring His mighty works to the world. James 4:8 says: “Draw near to God and He will draw near to you. Cleanse your hands, you sinners; and purify your hearts, you double-minded.”
Reflection: Am I fixing my eyes on Jesus, seeking His presence, and fully trusting in His strength and guidance to navigate life’s challenges?
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். சங்கீதம் 73:28.
உலகத்தையும் அதன் வேகத்தையும் நாம் கவனிக்கும்போது, நம் நம்பிக்கைகள் நம்மை குழப்பத்தில் கொண்டுவிடும். இயேசுவுக்குப் பதிலாக காற்றிலும் அலைகளிலும் கவனம் செலுத்தியபோது பேதுருவின் விசுவாசம் தடுமாறியது போலவே, நம்மைச் சுற்றியுள்ள சவால்களால் நம் கண்கள் திசைதிருப்பப்படும்போது நாமும் தடுமாறலாம். இருப்பினும், பேதுரு உதவிக்காக கதறியபோது, இயேசு பேதுருவைத் தூக்கினார், அவர்கள் ஒன்றாக தண்ணீரில் நடந்து படகில் ஏறினர்.
இது ஒரு அத்தியாவசிய சத்தியத்தை நமக்கு நினைவூட்டுகிறது: நாம் இயேசுவில் நம் பார்வையை வைக்கும் போது, அவர் நமது அசைக்க முடியாத அஸ்திவாரமாக மாறுகிறார் - நமது பெலன், நமது நம்பிக்கை மற்றும் நமது அனைத்தும். தேவனிடம் நெருங்கி வருவதும், அவர் மீது நமது நம்பிக்கையை வைப்பதும் நம் வாழ்க்கையை மாற்றுகிறது. இன்றைய வசனம் தெளிவாகச் சொல்கிறபடி, தேவனிடம் நெருங்கி வருவது நமக்கு நல்லது, ஏனென்றால் அவர் நமக்கு அடைக்கலம், அவர் சமூகம் நமக்கு பாதுகாப்பான இடம்.
உலகம் அடிக்கடி நம்மை பல திசைகளில் இழுத்துச் செல்லும்போது, நாம் தேவனின் பிரசன்னத்தைத் தேட வேண்டும், ஏனென்றால் அவர் இல்லாமல், நாம் சக்தியற்றவர்கள். எப்படி அவருடைய கிருபை இல்லாமல் நம்மால் ஒரு அடி கூட நகர முடியாதோ, அதேபோல் வாழ்க்கையின் போராட்டங்களை அவருடைய பெலன் இல்லாமல் நம்மால் எதிர்கொள்ள முடியாது. அவருடைய ஞானத்திலும் அன்பிலும் நம்பிக்கை வைத்து, நம் வாழ்க்கையை அவருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் பொறுப்பெடுத்து நம்மை வழிநடத்துகிறார்.
தேவனை நம்முடைய அடைக்கலமாகவும் பெலனாகவும் ஆக்கிக்கொண்டு, அவரிடம் நெருங்கி வர தெரிந்துகொள்வோமாக. அவ்வாறு செய்யும்போது, நாம் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் காண்பது மட்டுமல்லாமல், அவருடைய வல்லமையான செயல்களை உலகிற்கு அறிவிக்கும் மகிழ்ச்சியையும் பெறுவோம். யாக்கோபு 4:8 சொல்லுகிறது: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.”
சிந்தனைக்கு: நான் இயேசுவின் மீது என் கண்களை நிலைநிறுத்தி, அவருடைய பிரசன்னத்தைத் தேடி, வாழ்க்கையின் சவால்களை எதிகொள்ள அவருடைய பெலனையும் வழிகாட்டுதலையும் முழுமையாக நம்புகிறேனா?
கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். Amen
ReplyDeleteAmen.Thank you. Let us always fix our eyes on the Lord.
ReplyDeleteAmen
ReplyDeleteAmen
Deleteஆமென்
ReplyDelete