"Blog Y2 463 - Living Righteously, Winning Souls"
The fruit of the righteous is a tree of life, and he who wins souls is wise. Proverbs 11:30.
Today’s verse highlights two admirable qualities: righteousness and wisdom. A godly person, one who has dedicated their life to God, will embody both. The righteous person is dear to God and is likened to a tree of life—bearing fruit in due season and bringing blessings to others. Their life reflects God's goodness and holiness. On the other hand, wisdom is a gift from God. A wise person constantly contemplates eternal life and the Kingdom of God, prioritizing the winning of souls over fleeting worldly treasures.
Earthly wealth and achievements are temporary, but the souls we lead to God are of eternal value. They bring joy to our Heavenly Father and glorify Him. May our loving Heavenly Father help us to live righteous lives, seek His wisdom, and focus on the mission of winning souls for His Kingdom. Daniel 12:3 says: “Those who are wise shall shine like the brightness of the firmament, And those who turn many to righteousness like the stars forever and ever.”
Reflection: Do I have the righteousness and wisdom to bear fruit for God and lead souls to His Kingdom?
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். நீதிமொழிகள் 11:30.
இன்றைய வசனம் இரண்டு போற்றத்தக்க குணங்களை எடுத்துக்காட்டுகிறது: நீதி மற்றும் ஞானம். தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு கர்த்தருடைய பிள்ளை, தன்னுடைய வாழ்வில், இரண்டையும் பிரதிபலிப்பார். நீதிமான் தேவனுக்குப் பிரியமானவன், ஜீவவிருட்சத்துக்கு ஒப்பிடப்படுகிறான்—ஏற்ற காலத்தில் கனி கொடுத்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறான். அவர்களுடைய வாழ்க்கை தேவனுடைய நன்மையையும் பரிசுத்தத்தையும் பிரதிபலிக்கிறது. மறுபட்சத்தில், ஞானம் என்பது கடவுள் தந்த பரிசு. ஒரு ஞானமுள்ள நபர் தொடர்ந்து நித்திய ஜீவனையும் தேவனுடைய ராஜ்யத்தையும் பற்றி சிந்திக்கிறார், நிலையற்ற உலகப்பிரகாரமான பொக்கிஷங்களை விட ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்.
பூமிக்குரிய செல்வமும் சாதனைகளும் தற்காலிகமானவை, ஆனால் நாம் தேவனிடம் வழிநடத்தும் ஆத்துமாக்கள் நித்திய மதிப்புள்ளவை. அவை நமது பரலோக பிதாவை மகிழ்வித்து அவரை மகிமைப்படுத்துகின்றன. நீதியுள்ள வாழ்க்கை வாழவும், அவரது ஞானத்தைத் தேடவும், அவரது ராஜ்யத்திற்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தவும் நமது அன்பான பரம பிதா நமக்கு உதவுவாராக. தானியேல் 12:3 சொல்லுகிறது: “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.”
சிந்திக்க: தேவனுக்காக கனிகளைக் கொடுக்கவும், அவருடைய ராஜ்யத்திற்கு ஆத்துமாக்களை வழிநடத்தவும் எனக்கு நீதியும் ஞானமும் இருக்கிறதா?
Comments
Post a Comment