"Blog Y2 467 - God's Peace Reigns Forever"

The mountains will bring peace to the people, and the little hills, by righteousness. Psalms‬ ‭72‬:‭3‬.

        Two things can reign in our lives: the world or our Lord God. The world may offer temporary satisfaction, but it is not connected to the divine peace that only God provides. God’s blessings come with everlasting peace and true happiness, while the blessings offered by the world may only bring fleeting joy and comfort.
        When God reigns in our hearts, even the deepest storms of life reflect His calm. Our God is not only the God of the mountains; He is also the God of the valleys. He cares for both the mighty challenges, symbolized by mountains, and the smallest details, represented by hills.
        When our mighty Father reigns in our lives, His peace and righteousness prevail. God’s righteousness flows into every area of life, from the overwhelming challenges to the most minor concerns. As believers, we are called to walk in God’s ways, bringing His peace and righteousness wherever we go. Let us allow God to use us as vessels of His grace and love so that we may glorify Him in all things. Isaiah 32:17 says: “The work of righteousness will be peace, and the effect of righteousness, quietness and assurance forever.”

Reflection: Am I allowing God to reign in my life, bringing His peace and righteousness into every area?

பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். சங்கீதம் 72:3.

        இரண்டு காரியங்கள் நம்மை ஆளுகை செய்யலாம்: உலகம் அல்லது நம்முடைய கர்த்தராகிய தேவன். உலகம் தற்காலிக திருப்தியை வழங்கலாம், ஆனால் அது தேவன் மட்டுமே வழங்கும் தெய்வீக அமைதியுடன் இணையாகாது. தேவனின் ஆசீர்வாதங்கள் நித்திய சமாதானத்துடனும்  உண்மையான மகிழ்ச்சியுடனும் வருகின்றன, அதே நேரத்தில் உலகம் வழங்கும் ஆசீர்வாதங்கள் தற்காலிக மகிழ்ச்சியையும் ஆறுதலையும் மட்டுமே தரக்கூடும்.
        தேவன் நம் இருதயங்களில் ஆளுகை செய்யும்போது, வாழ்க்கையின் பெரிய  புயல்கள் கூட அவரது அமைதியை பிரதிபலிக்கின்றன. நம்முடைய தேவன் மலைகளின் தேவன் மாத்திரமல்ல; அவர் பள்ளத்தாக்குகளின் தேவனும் ஆவார். மலைகளாக குறிக்கப்படும் பெரும் சவால்களையும், குன்றுகளாக குறிக்கப்படும் சிறிய விஷயங்களையும் அவர் அக்கறையுடன் கவனிக்கிறார்.
        நமது வல்லமையுள்ள பிதா நம் வாழ்வில் ஆளுகை செய்யும்போது, அவரது சமாதானமும் நீதியும் நீங்காதிருக்கும். தேவனின் நீதியானது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், மிகப்பெரிய சவால்களிலிருந்து மிகச் சிறிய கவலைகள் வரை பாய்கிறது. விசுவாசிகளாகிய நாம், தேவனுடைய வழிகளில் நடக்கவும், நாம் எங்கு சென்றாலும் அவருடைய சமாதானத்தையும் நீதியையும் கொண்டுவரவும் அழைக்கப்படுகிறோம். எல்லாவற்றிலும் தேவனை நாம் மகிமைப்படுத்தும்படிக்கு, தேவன் தம்முடைய கிருபை மற்றும் அன்பின் பாத்திரங்களாக நம்மைப் பயன்படுத்த அனுமதிப்போமாக. ஏசாயா 32:17 சொல்லுகிறது: “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.”

சிந்திக்க: நான் தேவனை என் வாழ்க்கையில் ஆட்சி செய்ய அனுமதித்து, அவரது சமாதானம் மற்றும் நீதியை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நடைமுறைப் படுத்துகிறேனா?


 

Comments

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"