"Blog Y2 475 - God Is With Us Always"
For I am with you, and no one will attack you to hurt you. Acts 18:10.
What a beautiful and powerful truth: our Lord God, El Shaddai, is with us! This promise is especially comforting when we stand boldly for Christ. When we declare that Jesus Christ is Lord—that no one can come to the Father except through Him, and that there is no other way to eternal life—the world may rise against us. We often find ourselves without human support when we speak this truth, but we are never alone.
The enemy’s primary target is always God’s children. Yet our loving Father promises to stand with us every step of the way. Anyone who dares to harm us is touching the apple of His eye (Zec.2:8), and He will rise to defend us. Nothing can shake those who belong to God because the One who dwells within us is far greater than the one who is in the world.
We are anointed, sealed by the Spirit of God, and empowered to stand firm. With boldness, we can proclaim, “If God is for us, who can be against us?” Our strength, confidence, and courage come from knowing that the Almighty God is with us until our very last breath.
May the Lord God Almighty strengthen you and fill you with His presence always. Isaiah 41:10 says: “Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand.”
Reflection: Am I standing boldly for Christ, trusting in the promise that God is with me, and finding strength in His protection and presence, even when the world rises against me?
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. அப்போஸ்தலர் 18:10.
நம்முடைய கர்த்தராகிய தேவன், எல் ஷடாய், நம்மோடு இருக்கிறார் என்பது எஎவ்வளவு அருமையான சக்திவாய்ந்த சத்தியம்! கிறிஸ்துவுக்காக நாம் தைரியமாக நிற்கும்போது இந்த வாக்குத்தத்தம் விசேஷமாக ஆறுதலாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து, கர்த்தர் என்றும், அவர் மூலமாக அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நித்திய ஜீவனுக்கு வேறு வழியில்லை என்றும் நாம் அறிவிக்கும்போது, உலகம் நமக்கு விரோதமாக எழும்பக்கூடும். இந்த உண்மையைப் பேசும்போது நாம் பெரும்பாலும் மனித ஆதரவு இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம், ஆனால் நாம் ஒருபோதும் தனியாக இல்லை.
தேவனுடைய பிள்ளைகளைத்தான் முதலாவது எதிரி குறிவைப்பான். ஆனாலும் நம் அன்பான பரம தகப்பன் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நிற்பதாக வாக்குக் கொடுக்கிறார். நமக்குத் தீங்கு செய்கிறவன் தேவனுடைய கண்மணியைத் தொடுகிறான் (சகரியா 2:8), அவர் நம்மைப் பாதுகாக்க எழும்புவார். தேவனுக்கு சொந்தமானவர்களை எதுவும் அசைக்க முடியாது, ஏனென்றால் நமக்குள் வாசம் செய்பவர் உலகில் இருப்பவனை விட மிகவும் பெரியவர்.
நாம் தேவனுடைய ஆவியால் முத்திரையிடப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு உறுதியாக நிற்க அதிகாரம் பெற்றிருக்கிறோம். "தேவன் நம்முடன் இருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" என்று தைரியமாக நாம் அறிவிக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் நம்முடைய கடைசி மூச்சு வரை நம்மோடு இருக்கிறார் என்பதை அறிவதில் நமக்கு பெலன், நம்பிக்கை மற்றும் தைரியம் வருகிறது.
சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் உங்களை பெலப்படுத்தி, எப்போதும் தம்முடைய பிரசன்னத்தால் நிரப்புவாராக. ஏசாயா 41:10 சொல்லுகிறது: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
சிந்திக்க: தேவன் என்னுடன் இருக்கிறார் என்ற வாக்குறுதியை நம்பி, உலகம் எனக்கு எதிராக எழும்பும்போது கூட, அவருடைய பாதுகாப்பிலும் பிரசன்னத்திலும் பெலனடைந்து, நான் கிறிஸ்துவுக்காக தைரியமாக நிற்கிறேனா?
Comments
Post a Comment