"Blog Y2 480 - Victory Belongs to the Lord"

I will extol You, O Lord, for You have lifted me, And have not let my foes rejoice over me. Psalms 30:1.

        Our battles are not against flesh and blood; our fight is against the principalities and powers of the heavenly realm. We cannot face these battles on our own, which is why God has given us the Holy Spirit to take control of our lives.
        It is not by our strength or might, but by the Spirit of the Lord that we overcome. As God’s children, every battle we face is completely under His control. When enemies rise against us, our Heavenly Father will not remain silent. He will arise from His throne and fight on our behalf. He will never leave His children in the hands of the enemy.
        Therefore, let us surrender every battle to the Lord. Be still and know that He is God. No matter what we face, nothing is too hard for Him. As King David declared, our God will never allow our enemies to triumph over us. The ultimate victory was already won at Calvary, and the satan is a defeated foe. Psalms 18:48 says: "He delivers me from my enemies. You also lift me up above those who rise against me; You have delivered me from the violent man."

Reflection: Am I fully surrendering my battles to the Lord, trusting in His Spirit rather than relying on my own strength?

கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். சங்கீதம் 30:1.

        நமது போராட்டங்கள் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் உள்ள போராட்டமாகும். இந்த போராட்டங்களை நாம் சொந்தமாக எதிர்கொள்ள முடியாது, அதனால்தான் நம் வாழ்க்கையை வழிநடத்த தேவன் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்துள்ளார்.
        நமது பெலத்தினாலோ அல்லது வல்லமையினாலோ அல்ல, கர்த்தருடைய ஆவியினாலே நாம் ஜெயங்கொள்கிறோம். தேவனின் பிள்ளைகளாக, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போரும் முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. நமக்கு விரோதமாக எதிரிகள் எழும்பும்போது, நமது பரலோக பிதா அமைதியாக இருக்கமாட்டார். அவர் சிங்காசனத்திலிருந்து எழும்பி நமக்காக போரிடுவார். அவர் ஒருபோதும் தன் பிள்ளைகளை எதிரிகளின் கைகளில் விடமாட்டார்.
        எனவே, ஒவ்வொரு போரையும் தேவனிடம் ஒப்படைப்போம். தரித்து இருந்து , அவர் தேவன் என்பதை அறிவோம். நாம் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொண்டாலும், அவர் செய்ய முடியாதது எதுவும் இல்லை. தாவீது ராஜா சொன்னபடியே, நம்முடைய எதிரிகள் நம்மை ஜெயிக்க நம்முடைய தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இறுதி வெற்றி ஏற்கனவே கல்வாரியில் வென்ற்றாயிற்று, சாத்தான் தோற்கடிக்கப்பட்ட எதிரி. சங்கீதம் 18:48 சொல்லுகிறது: “அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.”

சிந்திக்க: நான் முழுமையாக என் போராட்டங்களில் என் சொந்தபெலத்தை  நம்பாமல் அவரது ஆவியின்மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரிடத்தில் முழுவதும்  ஒப்படைக்கிறேனா?



 

Comments

  1. அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்
    Amen - Glory to God

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"