"Blog Y2 485 - Delight in the Lord Always"

Delight yourself also in the Lord, and He shall give you the desires of your heart. Psalm 37:4.

        Delighting in the Lord is like carefully combining the finest ingredients to create the most exquisite cake it is a blend of love, devotion, and joyful obedience. To truly delight in God means to cultivate an intimate relationship with Him, doing what pleases Him and brings Him joy.
        When we draw near to God, praying without ceasing, meditating on His Word, loving Him with all our heart and soul, and surrendering to His will, delight in the Lord becomes a natural part of us. As we delight in Him, He also delights in us. Over time, His will becomes our will, and His desires become our desires.
        When our hearts are aligned with God’s will, He fulfills the desires of our hearts because those desires will be in harmony with His perfect plan. Let us set our hearts on pleasing our Heavenly Father, and He will surely grant our heart’s desires because they will be desires that glorify Him.
        May our souls find true delight in the Lord, and as we rejoice in Him, may He bless us with the fulfillment of all that pleases His heart. Matthew 6:33 says: “But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you.”

Reflection: Am I rejoicing in the Lord, knowing that as I delight in Him, He also delights in me and blesses me with what pleases His heart?

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4.

            கர்த்தரில்  மகிழ்வது என்பது மிகச்சிறந்த உட்பொருட்களை கவனமாக இணைத்து மிக நேர்த்தியான கேக்கை உருவாக்குவது போன்றது, இது அன்பு, பக்தி மற்றும் மகிழ்ச்சியோடு  கீழ்ப்படிதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது. உண்மையில் கர்த்தரில் மகிழ்ச்சியடைவது என்பது அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது, அவருக்குப் பிரியமானதையும் அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதையும் செய்வதாகும்.
            நாம் இடைவிடாமல் ஜெபித்து, அவருடைய வார்த்தையை தியானித்து, நம் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரை நேசித்து, அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, கர்த்தரிடத்தில் பிரியப்படுவது நம்மில் இயல்பான ஒரு பகுதியாக மாறுகிறது. நாம் அவரில் பிரியமாயிருப்பதுபோல, அவரும் நம்மில் பிரியமாயிருக்கிறார். காலப்போக்கில், அவருடைய சித்தம் நமது சித்தமாகிறது, அவருடைய ஆசைகள் நமது விருப்பங்களாக மாறுகின்றன.
            நமது இருதயங்கள் தேவனுடைய சித்தத்துடன் இணைந்திருக்கும் போது, அவர் நமது இருதயங்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார், ஏனென்றால் அந்த ஆசைகள் அவருடைய பரிபூரண திட்டத்துடன் இணக்கமாக இருக்கும். நமது பரலோக பிதாவை பிரியப்படுத்த நமது இருதயங்களை அர்ப்பணிக்கும்போது, அவர் நிச்சயமாக நம்முடைய இருதயத்தின் ஆசைகளை நிறைவேற்றுவார், ஏனென்றால் அவை அவரை மகிமைப்படுத்தும் ஆசைகளாக இருக்கும்.
            நம் ஆத்துமா உண்மையான மகிழ்ச்சியை கர்த்தரில் கண்டு,  நாம் அவரில் சந்தோஷமடையும்போது, அவருடைய இதயத்திற்குப் பிரியமான அனைத்தையும் நமக்குக் கொடுத்து  ஆசீர்வதிப்பாராக.! மத்தேயு 6:33 சொல்லுகிறது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”

சிந்திக்க: நான் கர்த்தரில் மகிழ்ச்சியாயிருக்கிறதுபோல, அவரும் என்னில் மகிழ்ச்சியாயிருந்து, தம்முடைய இருதயத்திற்குப் பிரியமானவற்றால் என்னை ஆசீர்வதிப்பாரென்று அறிந்து, அவருக்குள் களிகூருகிறேனா?

 



Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"