"Blog Y2 490 - Rooted in Christ’s Grace"

As you therefore have received Christ Jesus the Lord, so walk in Him, rooted and built up in Him and established in the faith, as you have been taught, abounding in it with thanksgiving. Colossians 2:6-7.

        We have not been saved by our strength or good works, but solely by the grace and love of our Lord Jesus Christ. However, salvation is not the finish line, it is just the beginning of our walk with Him. We have a long journey ahead, and we must be mindful of our salvation daily, growing in our relationship with Him every moment.
        Just as a great tree stands strong because of its deep roots, we too must be firmly rooted in Christ through a close relationship with Him in prayer. Our foundation must be built on God’s Word. Our priority should always be our spiritual life, investing our time in seeking Him first. The more time we spend with God, the stronger we become in Him. Every day, He empowers us to stand firm in faith.
        Let us thank and praise God for the priceless gift of salvation. May He strengthen us to walk faithfully and keep us from stumbling, just as He has promised. Ephesians 3:17 says: "That Christ may dwell in your hearts through faith; that you, being rooted and grounded in love."

Reflection: Am I recognizing that my salvation is just the beginning of my journey with Christ, and am I consistently nurturing my relationship with Him through prayer and His Word, making my spiritual growth a priority?

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசெயர் 2:6-7.

            நம்முடைய பெலத்தினாலோ நற்கிரியைகளினாலோ நாம் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும் அன்பினாலும் மட்டுமே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும், இரட்சிப்பு என்பது முடிவு கோடு அல்ல, அது அவருடனான நமது பயணத்தின் ஆரம்பம். நமக்கெதிரே நீண்ட பயணம் உள்ளது, ஒவ்வொரு நிமிடமும் அவருடனான நமது உறவில் வளர்ந்து, தினமும் நமது இரட்சிப்பைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
            ஒரு பெரிய மரம் அதன் ஆழமான வேர்களினால் எப்படி உறுதியாக நிற்கிறதோ, அதேபோல், நாமும் ஜெபத்தில் கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவின் மூலம் கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்ற வேண்டும். நம்முடைய அஸ்திபாரம் கடவுளுடைய வார்த்தையின் மீது கட்டப்பட வேண்டும். நமது முன்னுரிமை எப்போதும் நமது ஆவிக்குரிய வாழ்க்கையாக இருக்க வேண்டும், முதலில் அவரைத் தேடுவதில் நமது நேரத்தை செலவு செய்ய வேண்டும். தேவனோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரில் பெலப்படுகிறோம். ஒவ்வொரு நாளும், விசுவாசத்தில் உறுதியாக நிற்க அவர் நமக்கு அதிகாரம் அளிக்கிறார்.
            இரட்சிப்பின் விலைமதிப்பற்ற ஈவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தி துதிப்போம். அவர் வாக்குத்தத்தம் செய்தபடியே, உண்மையாய் நடக்கவும், இடறலிலிருந்து நம்மைக் காக்கவும் அவர் நம்மைப் பெலப்படுத்துவாராக. எபேசியர் 3:17 சொல்லுகிறது: ”விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,”

சிந்திக்க: எனது இரட்சிப்பு கிறிஸ்துவுடனான எனது பயணத்தின் ஆரம்பம் என்பதை நான் அங்கீகரித்து, ஜெபம் மற்றும் அவருடைய வார்த்தையின் மூலம் அவருடனான எனது உறவை நான் தொடர்ந்து வளர்த்து, எனது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறேனா?

 

Comments

Popular posts from this blog

"Blog Y2 452 - Strengthened by Waiting on God"

"Blog Y2 570 - Anchored in Divine Purpose"

"Blog Y2 461 - Let Praises Unlock Miracles"