"Blog Y2 493 - God, Our Rock and Refuge"

The Lord is my rock and my fortress and my deliverer; My God, my strength, in whom I will trust; My shield and the horn of my salvation, my stronghold. Psalm 18:2.  
         When we meditate on this verse, we see how loving and faithful our Heavenly Father is toward us. It fills our hearts with comfort and assurance, reminding us that we are safe in His hands.
        He is our Rock, which signifies stability, when everything else crumbles, God remains steadfast. He is our Strength in times of weakness, empowering us to endure. He is our Shield, protecting us from dangers seen and unseen. How precious we are to Him! This verse is not just a statement it is a personal declaration from God over our lives.
        Trusting in God means surrendering our worries and leaning on His strength instead of our own. In the midst of calamities, chaos, and distractions in this world, the Creator of heaven and earth assures us of His steadfast presence. He is our Horn of Salvation, the One who secures and upholds our salvation until our last breath. Psalm 9:9 says: “The Lord also will be a refuge[c] for the oppressed, A refuge in times of trouble.”

Reflection: Am I truly relying on God’s unwavering strength and protection, surrendering my fears and uncertainties, and trusting Him completely in every circumstance of my life?

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். சங்கீதம் 18:2.
            இந்த வசனத்தை நாம் தியானிக்கும்போது, நமது பரலோக பிதா நம்மீது எவ்வளவு அன்பாகவும் உண்மையாகவும் இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். அது நமது இருதயங்களுக்கு ஆறுதலையும் உறுதியையும் கொடுத்து, நாம் அவருடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது.
            அவர் நமது கன்மலை என்பது ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது, மற்ற அனைத்தும் சரிந்துவிட்டாலும், தேவன் உறுதியாக நிலைத்திருப்பார். நாம் பலவீனமான போதெல்லாம் அவர் நம்முடைய பலமாக இருந்து, தாங்கிக்கொள்ளும் வல்லமையை தருகிறார். அவர் நம்முடைய கேடயம், கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றுகிறார். நாம் அவருக்கு எவ்வளவு அருமையானவர்கள்! இந்த வசனம் ஒரு அறிக்கை மட்டுமல்ல, தேவன் நம்மீது உரிமையுடன் கூறும் ஒரு வாக்குறுதியும் ஆகும்.
            தேவனை நம்புவது என்பது நம்முடைய கவலைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து, நம்முடைய சொந்த பலத்திற்கு பதிலாக அவருடைய பெலத்தில் சாய்ந்து கொள்வதாகும். இந்த உலகில் பேரழிவுகள், குழப்பங்கள் மற்றும் மனக்கலக்கங்களுக்கு மத்தியில், வானத்தையும் பூமியையும் படைத்தவர் தனது உறுதியான பிரசன்னத்தை நமக்கு வாக்களிக்கிறார். அவர் நமது இரடச்சண்ய கொம்பு, நமது கடைசி மூச்சு வரை நமது இரட்சிப்பைப் பாதுகாத்து ஆதரிக்கிறவர். சங்கீதம் 9:9 சொல்லுகிறது: “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.”

சிந்திக்க: நான் உண்மையிலேயே தேவனின் அசைக்க முடியாத பெலத்தையும் பாதுகாப்பையும் சார்ந்திருந்து, என் பயங்களையும் குழப்பங்களையும் முழுமையாக அவரிடம் ஒப்படைத்து, என் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனை முழுமையாக நம்புகிறேனா?




 

Comments

  1. இந்த நம்பிக்கை எனக்கு இல்லை என்றால்‌ இப்போது நான் பூமியில் இருந்துதிறக்க மாட்டேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"