"Blog Y2 515 - Obedience Rooted in Love"
If you love Me, keep My commandments. John 14:15.
In Matthew 22:37 and 39, Jesus says Two Commandments.
1. You shall love the Lord your God with all your heart, with all your soul, and with all your mind.
2. You shall love your neighbor as yourself.
In verse 40, He says, “On these two commandments hang all the Law and the Prophets.” In today’s verse, Jesus emphasizes this in John 14:15, “If you love Me, keep My commandments.”
The true expression of our love for our Heavenly Father is found in faithfully obeying His commandments. His laws are not burdensome, yet by our own strength, we often find it challenging to keep them. Just as loving someone naturally leads us to listen to and care for their needs, our genuine love for God compels us to embrace every command He gives.
God never expects us to do what is beyond our ability. Fully aware of our strengths and weaknesses, He does not leave us to bear His yoke alone. Instead, He has given us the Holy Spirit to help, guide, and sustain us. All that is required is to yield and surrender our will to Him, making Him our foremost love. When we nurture an intimate relationship with God, His commandments become not a heavy burden but a joyful way of life. In Matthew 11:30, Jesus says: “For My yoke is easy and My burden is light.”
Reflection: Am I allowing the Holy Spirit to guide me in following Jesus' commandments of love, trusting His strength rather than relying only on my own efforts?
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15.
மத்தேயு 22:37 மற்றும் 39 ஆகிய வசனங்களில் இயேசு இரண்டு கட்டளைகளைக் கூறுகிறார்.
1. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.
2. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40-ம் வசனத்தில், "இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்." மேலும் இன்றைய வசனத்தில் இயேசு, "நீங்கள் என்னில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" என்று யோவான் 14:15ல் வலியுறுத்துகிறார்.
நமது பரலோக பிதாவுடனான நமது அன்பின் உண்மையான வெளிப்பாடு அவரது கட்டளைகளை உண்மையுடன் கீழ்ப்படிவதில் காணப்படுகிறது. அவருடைய கற்பனைகள் பாரமானவை அல்ல, என்றாலும் நம்முடைய சொந்த பலத்தால், அவற்றைக் கடைப்பிடிப்பது பெரும்பாலும் நமக்குச் சவாலாக இருக்கிறது. ஒருவரை நேசிப்பது இயல்பாகவே அவருடைய தேவைகளைக் கேட்கவும் கவனித்துக்கொள்ளவும் நம்மை வழிநடத்துகிறது, தேவன் மீது நாம் வைத்திருக்கும் உண்மையான அன்பு, அவர் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் ஏற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.
தேவன் எப்போதும் நம் திறனை மீறி எதையும் செய்ய நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நமது பலம் மற்றும் பலவீனங்களை அவர் முழுமையாக அறிந்திருப்பதால், அவர், நம்மை அவருடைய நுகத்தை தனியாகச் சுமக்க விடுவதில்லை. மாறாக, நமக்கு உதவவும், வழிநடத்தவும், ஆதரிக்கவும் அவர் பரிசுத்த ஆவியை நமக்குத் தந்துள்ளார். அவரை நமது முதன்மையான அன்பாக மாற்றி, நமது சித்தத்தை அவர் செய்ய விட்டுக்கொடுப்பது அவசியம். நாம் தேவனுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டால், அவரது கட்டளைகள் ஒரு பாரமாக இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையாக மாறிவிடும். மத்தேயு 11:30-ல், இயேசு கூறுகிறார்: "என் நுகம் மென்மையானது, என் சுமை இலகுவாயிருக்கிறது."
சிந்திக்க: நான் இயேசுவின் அன்பின் கட்டளைகளை மேற்கொள்வதில், என் சொந்த முயற்சிகளை மட்டுமே சார்ந்து இல்லாமல், அவர் அளிக்கும் பலத்தில் நம்பிக்கை வைத்து பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட அனுமதிக்கிறேனா?
Every test that we experience happens to all but he will not test beyond our capability and he will give us the strength and endurance through holyspirit ,we can carry yoke and fulfill his commandments
ReplyDelete