"Blog Y2 520 - Boldly Approach His Throne"

Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy and find grace to help in time of need. Hebrews 4:16.
        God’s throne of grace and His presence are the safest places, and the time we spend in His presence is the most precious moment of our lives. Whenever we face difficult situations that we cannot handle, we should not run to the phone or to other people, we should immediately run to His throne of grace.
        Through Jesus Christ, we have access to the Father, for He is our great High Priest who intercedes on our behalf. Before Christ, sin separated us from God, leaving us distant and unworthy. But through His sacrifice, the veil was torn, and we were granted full access to His presence. Now, we do not have to approach God with fear of judgment, but with confidence in His mercy. This grace is not something we can earn; it is a gift given freely to those who believe in Him. When we accept Christ, we step into this unshakable assurance that His mercy is new every morning.
        Everyone in this world has their own struggles, and sometimes, their experiences do not match ours, leaving them unable to offer solutions to us. Yet the One who searches our hearts and knows our innermost thoughts can give the absolute and perfect solution. So, let us boldly approach His throne of grace. Luke 18:7 says: “And shall God not avenge His own elect who cry out day and night to Him, though He bears long with them?”

Reflection: Am I approaching God's throne of grace with confidence, trusting in His mercy and help in every situation I face?

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரெயர் 4:16.
            தேவனுடைய கிருபாசனமும் அவருடைய பிரசன்னமும் பாதுகாப்பான இடங்கள், அவருடைய பிரசன்னத்தில் நாம் செலவிடும் நேரம் நம் வாழ்க்கையின் மிக விலைமதிப்பற்ற தருணம். நம்மால் கையாள முடியாத கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், தொலைபேசிக்கோ, மற்றவர்களிடமோ நாம் ஓடக்கூடாது, உடனடியாக அவரது கிருபாசனத்தை நோக்கி ஓட வேண்டும்.
            இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நாம் பிதாவை அணுகலாம், ஏனென்றால் அவர் நமக்காக பரிந்து பேசும் நமது பெரிய பிரதான ஆசாரியர். கிறிஸ்துவுக்கு முன்பு, பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரித்து, நம்மை தூரமாகவும் தகுதியற்றவர்களாகவும் விட்டுச்சென்றது. ஆனால் அவரது தியாகத்தின் மூலம், திரை கிழிந்தது, மற்றும் அவரது பிரசன்னத்திற்கு முழு அணுகல் நமக்கு வழங்கப்பட்டது. இப்போது, நாம் நியாயத்தீர்ப்புக்கு பயந்து தேவனை அணுக வேண்டியதில்லை, ஆனால் அவருடைய இரக்கத்தில் நம்பிக்கையுடன் அணுக வேண்டும். இந்த கிருபை நாம் சம்பாதிக்கக்கூடிய ஒன்றல்ல; அது அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் ஈவு. நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, ஒவ்வொரு காலையிலும் அவருடைய இரக்கம் புதிது என்ற இந்த அசைக்க முடியாத நிச்சயத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம்.
            இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த போராட்டங்கள் உள்ளன, சில நேரங்களில் அவர்களின் அனுபவங்கள் நம்முடயவைகளுடன் ஒத்திருக்காது, அதனால் அவர்களால் நமக்கு  ஆலோசனைகளை  வழங்க முடியாது. ஆனால், நம்முடைய உள்ளங்களை ஆராய்ந்து, நம்முடைய ஆழ்ந்த சிந்தனைகளையும் அறிந்து கொள்ளும் ஒரே தேவனால் மிகச் சிறந்த தீர்வை அளிக்க முடியும். எனவே, நாம் தைரியமாக அவரது கிருபாசனத்தை அணுகுவோம். லூக்கா 18:7 சொல்லுகிறது: “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

சிந்திக்க: நான் என் வாழ்க்கையில்  எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிலையையும் சந்திக்கும் போது,  நான் தேவனுடைய இரக்கத்தையும் உதவியையும் நம்பி  அவருடைய கிருபாசனத்தை  அணுகுகிறேனா?

 

Comments

  1. We have confidence in approaching God that he is giver of good things.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"