"Blog Y2 530 - Trust God and Stand Firm"

Be of good courage, and let us be strong for our people and for the cities of our God. And may the Lord do what is good in His sight. 1 Chronicles 19:13.
        Whatever promise God gives us, we must do our part, and our Father will take care of the rest. No matter the situation, the final decision belongs to God. In this verse, He calls us to be courageous, strong, and bold as we seek Him in prayer. Our responsibility is to stand firm and engage in the battles in our life while He determines the outcome.
        As believers, our strength is not only for ourselves but for those around us, our families, churches, and communities. A Christian should be a pillar of support, encouraging others in faith and leading by example. In times of crisis, we are called to stand firm in truth, pray fervently, and extend a helping hand to those in need. The world is filled with uncertainty, but when we remain firm in God, we bring hope and stability to our society, reflecting His love and faithfulness.
        Ultimately, we must entrust everything into His hands, allowing Him to accomplish what is good in His sight. His plans are always perfect and lead us to victory. As Isaiah 59:19 reminds us, “When the enemy comes in like a flood, the Spirit of the Lord will lift up a standard against him.” Our Almighty God will come like a rushing stream, driven by His breath, pushing back the enemy.
        May our sovereign and mighty God take control of every battle we face. Victory belongs to Him alone! Joshua 1:9 says: "Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go." 

Reflection: Am I standing firm in faith, relying on God's strength, and boldly seeking Him in prayer, trusting that He will fight my battles and accomplish what is best according to His perfect will?

தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 2.நாளாகமம் 19:13.
            தேவன்  நமக்குக் கொடுக்கிற வாக்குறுதியை அடைய, நாம் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும். அப்பொழுது மீதமுள்ள வேலையை நம் பரம தகப்பன் பார்த்துக்கொள்வார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், இறுதி முடிவு தேவனுக்கு சொந்தமானது. இந்த வசனத்தில், நாம் ஜெபத்தில் அவரைத் தேடுகையில்; தைரியமாகவும், பலமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க அவர் நம்மை அழைக்கிறார். முடிவை அவர் தீர்மானிக்கும் போது, உறுதியாக நின்று வாழ்க்கையின் போராட்டங்களில்  ஈடுபடுவதே நமது பொறுப்பு.
            விசுவாசிகளாகிய நமது பெலன் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும், நமது குடும்பங்களுக்கும், சபைகளுக்கும், சமுதாயத்திற்காகவும் இருக்கவேண்டும். ஒரு கிறிஸ்தவர் அநேகருக்கு ஆதரவின் தூணாக இருக்க வேண்டும், விசுவாசத்தில் மற்றவர்களை ஊக்குவித்து, முன்மாதிரியாக இருக்கவேண்டும். நெருக்கடியான காலங்களில், நாம் சத்தியத்தில் உறுதியாக நிலைத்து, தீவிரமாக ஜெபித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறோம். உலகம் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் நாம் தேவனில் உறுதியுடன் நிலைத்திருக்கும் போது, தேவனுடைய அன்பையும் விசுவாசத்தையும் பிரதிபலிக்கும்படி நமது சமுதாயத்திற்கு நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வரவேண்டும்..
            இறுதியில், நாம் எல்லாவற்றையும் அவரது கைகளில் ஒப்படைக்க வேண்டும், அவருடைய பார்வைக்கு நலமானதை நிறைவேற்ற அவரை அனுமதிக்க வேண்டும். அவரது திட்டங்கள் எப்போதும் சரியானவை மற்றும் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்கின்றன. ஏசாயா 59:19 நமக்கு நினைவூட்டுவது போல், "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." நமது சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய சுவாசத்தினால் உந்தப்பட்டு, சத்துருவைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு ஓடுகிற நீரோடையைப்போல வருவார். 
            நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டங்களை, தமது மகத்துவத்தையும், வல்லமையும் கொண்ட தேவன்  கட்டுப்படுத்துவாராக. வெற்றி அவருக்கே உரியது! யோசுவா 1:9 சொல்லுகிறது: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

சிந்திக்க: நான், தேவனுடைய பெலத்தை நம்பி, ஜெபத்தில் தைரியமாக அவரைத் தேடி, அவர் என் குழப்பங்களில் என்னை நடத்தி, அவருடைய பரிபூரண சித்தத்தின்படி சிறந்ததை நிறைவேற்றுவார் என்று நம்பி விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறேனா?

 

Comments

  1. உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் Amen

    ReplyDelete
  2. We make horses ready for the battle but victory comes from the Lord !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"