The young lions lack and suffer hunger; But those who seek the Lord shall not lack any good thing. Psalms 34:10.
Even the strong young lions go hungry. Likewise, even the wealthy and powerful may experience emptiness and dissatisfaction. But the one who seeks God will never lack any good thing. When we depend on God for everything and seek Him sincerely with all our heart, we are led into a life of peace and contentment, because He is the Author of life. No one can fully understand the inner and outer struggles of a person’s life, but God can. He alone knows our thoughts and understands our hearts.
As we seek Him in every step of our lives, He faithfully meets all the needs of our body, soul, and spirit. Great kings like Jehoshaphat and David sought only God and depended entirely on Him, and they succeeded because of His guidance.
Our God is also sincerely longing for a relationship with us. Seeking Him is not only about receiving blessings but also about building an intimate relationship with our Heavenly Father. Only when we seek Him wholeheartedly can that relationship grow. So let us surrender our hearts and humble our spirits in His presence. Let us seek God fervently and draw closer to Him every day. Matthew 6:33 says: "But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you."
Reflection: Am I wholeheartedly seeking God's guidance and building a deep relationship with Him by relying on His support for every need and surrendering my heart and spirit daily?
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10.
வலிமையான சிங்கக் குட்டிகள் கூட பட்டினியாயிருக்கலாம். அதேபோல், செல்வந்தர்களும் அதிகாரம் படைத்தவர்களும் கூட வெறுமையையும் அதிருப்தியையும் அனுபவிக்கலாம். ஆனால் தேவனைத் தேடுபவருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. நாம் எல்லாவற்றிற்கும் தேவனைச் சார்ந்து, நமது முழு இருதயத்தோடும் அவரை உண்மையாகத் தேடும்போது, நாம் சமாதானமும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கைக்கு வழிநடத்தப்படுகிறோம், ஏனென்றால் அவர் வாழ்க்கையை தொடக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார். ஒரு நபரின் வாழ்க்கையின் உள் மற்றும் வெளிப்புற போராட்டங்களை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் தேவனால் முடியும். நம்முடைய சிந்தனைகளையும், இருதயத்தையும் அவர் மட்டுமே நன்கு அறிந்திருக்கிறார்.
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நாம் அவரைத் தேடும்போது, நமது உடல், ஆத்துமா மற்றும் ஆவியின் அனைத்து தேவைகளையும் அவர் உண்மையுடன் சந்திக்கிறார். யோசபாத், தாவீது போன்ற பெரிய ராஜாக்கள் தேவனை மட்டுமே தேடி, முற்றிலும் அவரையே சார்ந்திருந்தார்கள், அவருடைய வழிநடத்துதலின் காரணமாக அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
நம்முடைய தேவனும் நம்முடன் ஆழமான உறவை விரும்புகிறார். அவரை நாடுவது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமல்ல, பரலோகப் பிதாவாகிய அவருடன் நெருங்கிய உறவை உருவாக்குவதுமாகும். நாம் அவரை முழு மனதுடன் தேடும்போதுதான் அந்த உறவு வளரும். ஆகவே நாம் நமது இருதயங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்து, நமது ஆவியை அவருடைய முன்னிலையில் தாழ்த்துவோம். தேவனை உண்மையோடும் தீவிரமாகவும் நாடி, தினமும் அவரிடம் நெருக்கமாக வாழ்வோம். மத்தேயு 6:33 சொல்லுகிறது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”
சிந்திக்க: நான் முழு இருதயத்தோடு தேவனின் வழிகாட்டுதலைத் தேடி, என் ஒவ்வொரு தேவைக்கும் அவர் மீது சார்ந்துகொண்டு, என் இருதயத்தையும் ஆவியையும் தினமும் அவரிடம் ஒப்படைத்து, ஆழமான உறவொன்றை கட்டியெழுப்புகிறேனா?
Yes when we seek God he makes everything beautiful in his time ! Amen !!
ReplyDelete