"Blog Y2 533 - Comforted by His Presence"

Blessed are those who mourn, For they shall be comforted. Matthew 5:4. 

Both worldly people and God’s children experience sorrow and hardship, but the way they face these challenges is completely different. Even in the midst of the storm, God’s children remain peaceful and joyful because their hope is not in this uncertain world. Our hope is in God, the Creator of heaven and earth. God’s children know that their help and comfort come from Him.

When we mourn over sin, injustice, or suffering, we are aligning our hearts with the heart of Christ. And Jesus promises comfort, which is deep and lasting healing that only He can give. He walks with us, carries our burdens, and speaks peace to our pain. Whether it is sorrow from our own sin, the loss of a loved one, or the weight of a weary world, His presence brings true comfort.

So today, if you are mourning, know that you are not forgotten or forsaken. God sees every tear, hears every cry, and offers comfort that the world cannot give. Let your mourning lead you closer to Him. Invite His presence into your pain, and allow His Spirit to bring healing to your soul. We are truly blessed because our help and comfort come from the Lord our mighty God! Psalm 34:18 says: "The Lord is near to those who have a broken heart, And saves such as have a contrite spirit."

Reflection: Am I seeking God's nearness during my hardships, allowing my sorrow to deepen my relationship with Christ and trusting in His unique comfort to renew my hope and strength?

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4.

சாதாரண மக்களும் தேவனுடைய பிள்ளைகளும் துக்கத்தையும் கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள், ஆனால் இந்த சவால்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் முற்றிலும் வேறுபட்டது. வாழ்க்கைப்  புயலின் மத்தியிலும் தேவனுடைய பிள்ளைகள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய நம்பிக்கை இந்த நிச்சயமற்ற உலகில் இல்லை. வானத்தையும் பூமியையும் படைத்த தேவனிலேயே உள்ளது. தங்களுக்கு உதவியும் ஆறுதலும் அவரிடமிருந்தே வருகிறது என்பதை தேவனுடைய பிள்ளைகள் அறிவார்கள்.

பாவம், அநீதி அல்லது துன்பத்திற்காக நாம் துக்கப்படும்போது, ​​நம் இதயங்களை கிறிஸ்துவின் இருதயத்துடன் இணைக்கிறோம். இயேசு ஒரு ஆழமான, நிலைத்திருக்கக்கூடிய ஆறுதலை வாக்குக் கொடுக்கிறார், அதை ஒருவரும் அவரைப் போல தர முடியாது. அவர் நம்மோடு நடந்து, நமது பாரத்தை சுமந்து, நமது வலிக்கு ஆறுதலைக்  கொடுக்கிறார். அது நம் சொந்த பாவத்தால் ஏற்பட்ட துக்கமாக இருந்தாலும் சரி, அன்புக்குரியவரின் இழப்பாக இருந்தாலும் சரி, அல்லது சோர்வடைந்த உலகின் பாரமாக இருந்தாலும் சரி, அவருடைய பிரசன்னம் உண்மையான ஆறுதலைக் கொண்டுவருகிறது. 

எனவே இன்று, நீங்கள் துக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் மறக்கப்படவில்லை அல்லது கைவிடப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவன் ஒவ்வொரு கண்ணீரையும் காண்கிறார், ஒவ்வொரு அழுகையையும் கேட்கிறார், உலகம் தர முடியாத ஆறுதலை அளிக்கிறார். உங்கள் துக்கம் உங்களை அவரிடம் நெருங்கி அழைத்துச் செல்லட்டும். உங்கள் வேதனையில் அவருடைய பிரசன்னத்தை அழைத்து, அவருடைய ஆவி உங்கள் ஆத்துமாவை குணமாக்க  அனுமதியுங்கள். சங்கீதம் 34:18 கூறுகிறது: "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்."

சிந்திக்க: என் வேதனைகளின் நேரத்தில் நான் தேவனோடு உறவைத் தேடி, என் துக்கம் கிறிஸ்துவுடனான எனது உறவை ஆழப்படுத்தவும், என் நம்பிக்கையையும் பலத்தையும் புதுப்பிக்கவும், தேவனுடைய தனித்துவமான ஆறுதலை நம்புகிறேனா?




 

Comments

  1. Powerful beatitude outlining the path to blessed life , while we derive strength from God in all situations.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"