"Blog Y2 535 - Love Him with All Heart"
If you love Me, keep My commandments. John 14:15.
Love is a divine gift from God. The same God who poured His love into our hearts through the Holy Spirit now calls us to love Him more than anything else in this world. He demonstrated His love by sending His only begotten Son as a living sacrifice to save us from our sins. His love is beyond compare; there is no love like it in this world.
Now, it is our turn to respond to His love. It’s not enough to simply sing songs or say with our lips that we love God. He expects more from us. When we truly love someone, we desire to please them by listening to their words and following them. In the same way, if we genuinely love God, we will follow Him with all our hearts.
Loving Him empowers us to obey His laws and commandments. When we walk in His love, others will clearly see Christ in us through our actions, our words, and even our thoughts. Everything in us begins to reflect Him. Let us ask our Father to fill our hearts with His love so that we may live in a way that truly honors Him. 1 John 5:3 says: “For this is the love of God, that we keep His commandments. And His commandments are not burdensome.”
Reflection: Am I truly loving God with all my heart by aligning my actions, words, and thoughts to His will, and living in a way that reflects His love daily?
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15.
அன்பு என்பது கடவுள் கொடுத்த தெய்வீக பரிசு. பரிசுத்த ஆவியானவரின் மூலமாக தமது அன்பை நம் இருதயங்களில் ஊற்றிய அதே தேவன் இப்போது இந்த உலகத்தில் வேறு எதையும் விட அவரை நேசிக்க நம்மை அழைக்கிறார். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க தம்முடைய ஒரேபேறான குமாரனை ஜீவபலியாக அனுப்பியதன் மூலம் அவர் தமது அன்பை வெளிப்படுத்தினார். அவரது அன்பு ஒப்பிட முடியாதது, இந்த உலகில் அதைப் போன்ற அன்பு வேறு எதுவும் இல்லை.
இப்போது, அவருடைய அன்பை பிரதிபலிப்பது நமது முறை. வெறுமனே பாடல்களைப் பாடுவதோ அல்லது தேவனை நேசிக்கிறோம் என்று உதடுகளால் சொல்வதோ போதாது. அவர் நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறார். நாம் ஒருவரை உண்மையிலேயே நேசிக்கும்போது, அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்பதன் மூலமும் அவர்களைப் பின்பற்றுவதன் மூலமும் அவர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறோம். அதேபோல், நாம் தேவனை உண்மையாக நேசிப்போமானால், நம் முழு இருதயத்தோடும் அவரைப் பின்பற்றுவோம்.
அவரை நேசிப்பது அவருடைய நியாயப்பிரமானத்திற்கும் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிய நம்மை ஊக்குவிக்கிறது . நாம் அவருடைய அன்பில் நடக்கும்போது, மற்றவர்கள் கிறிஸ்துவை நமக்குள்ளே, நமது செயல்கள், வார்த்தைகள், எண்ணங்கள் மூலம் தெளிவாகக் காண்பார்கள். நம்மில் உள்ள அனைத்தும் அவரை பிரதிபலிக்கத் தொடங்குகிறது. நம் பிதாவை உண்மையிலேயே கனப்படுத்தும் விதத்தில் வாழும்படி, அவருடைய அன்பினால் நம் இருதயங்களை நிரப்பும்படி கேட்போமாக. 1 யோவான் 5:3 சொல்லுகிறது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”
சிந்திக்க: நான் என் செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள் அனைத்தையும் தேவனின் சித்தத்துடன் சீரமைத்து, நாள்தோறும் அவரது அன்பை பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ்ந்து, உண்மையிலேயே முழு இதயத்துடன் தேவனை நேசிக்கிறேனா?
Fill our heart with your love lord so we live in order to honor you .
ReplyDeleteAmen.
ReplyDelete