Behold, I long for Your precepts; Revive me in Your righteousness. Let Your mercies come also to me, O Lord—Your salvation according to Your word. So shall I have an answer for him who reproaches me, for I trust in Your word. Psalm 119:40-42.
Oh, what a precious prayer from the heart of the psalmist! May it become the cry of our hearts as well. How perfect is the righteousness of our God! We long to walk in His commandments, to delight in His ways. When love for Him fills our hearts, it births a deep longing to please Him in all things. As the Holy Spirit enters and takes His rightful place within us, He abundantly pours the Father’s love into our souls, shaping our desires and leading us into all truth.
How sweet it is to dwell in the embrace of our Heavenly Father! His promises are our anchor and song, lifting our spirits when we are weary. He is faithful in fulfilling every word He has spoken because His love never fails.
In His perfect time, the world will see Christ alive in us. Those who mocked, doubted, or looked on with confusion will marvel at the wonders God works in our lives. His love will cover us, His glory will shine through us, and it will be known beyond doubt to whom we belong. Psalm 119:76 says: "Let, I pray, Your merciful kindness be for my comfort, According to Your word to Your servant."
Reflection: Am I letting the Holy Spirit take His rightful place in my life, shaping my desires, leading me into truth, and reflecting Christ to the world around me?
இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. சங்கீதம் 119:40-41.
இது, சங்கீதக்காரனின் இருதயத்திலிருந்து எழும்பும் முக்கியமான ஜெபம்! அது நம் இதயங்களின் அழுகையின் மன்றாட்டாக மாறட்டும். நம்முடைய தேவனுடைய நீதி எவ்வளவு உத்தமமானது! அவருடைய கட்டளைகளில் நடக்கவும், அவருடைய வழிகளில் மகிழ்ச்சியடையவும் நாம் வாஞ்சையாயிருக்கிறோம். அவர் மீதான அன்பு நம் இருதயங்களை நிரப்பும்போது, எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆழமான ஏக்கத்தை அது பிறப்பிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து, ஆவியில் நிறையும்போது, அவர் பிதாவின் அன்பை நம் ஆத்துமாக்களில் ஏராளமாக ஊற்றி, நமது ஆசைகளை வடிவமைத்து, எல்லா சத்தியத்திற்கும் நம்மை வழிநடத்துகிறார்.
நமது பரலோக பிதாவின் அரவணைப்பில் வாழ்வது எவ்வளவு இனிமையானது! அவரது வாக்குறுதிகள் நம் நம்பிக்கையும் பாட்டுமாயிருந்து, நாம் சோர்வடைந்த நேரங்களில் நம்மை உயர்த்துகின்றன. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுவதில் அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார், ஏனென்றால் அவருடைய அன்பு ஒருபோதும் ஒழியாது.
அவர் நியமித்த சரியான நேரத்தில், கிறிஸ்து நம்முள் ஜீவிப்பதை உலகம் காணும். பரியாசம் செய்தவர்கள், சந்தேகித்தவர்கள், குழப்பத்துடன் பார்த்தவர்கள் தேவன் நம் வாழ்வில் செய்யும் அதிசயங்களைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். அவருடைய அன்பு நம்மை மூடும், அவருடைய மகிமை நம்மீது பிரகாசிக்கும், நாம் யாருக்கு சொந்தமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தப்படும். சங்கீதம் 119:76 சொல்லுகிறது: “நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.”
சிந்திக்க: என் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய உரிய இடத்தை பெற அனுமதித்து, என் ஆசைகளை வடிவமைத்து, என்னை சத்தியத்திற்குள் நடத்தி, என்னை சுற்றியுள்ள உலகத்திற்கு கிறிஸ்துவை பிரதிபலிக்கச் செய்கிறேனா?
Amen
ReplyDeleteYes !! The final word is from the lord .Amen
ReplyDelete