And the Lord, He is the One who goes before you. He will be with you, He will not leave you nor forsake you; do not fear nor be dismayed. Deuteronomy 31:8.
There is no greater privilege or blessing than knowing that our Lord God, the Creator of Heaven and Earth, the One who holds our future and knows every minute detail of our lives, is the One who goes before us. Not only does He go before us, but He is also with us and dwells within us.
What a beautiful promise from the God who never lies or changes His Word! He has promised never to leave us nor forsake us. People may fail us, but our loving Father will never give up on us. We are unworthy of such love; we have denied Him so many times, yet He continues to love us. His ultimate desire is to bring us to Himself so that we may reign with Him. How can we ever repay such amazing love? The only way is by doing His will and fulfilling the mission He has assigned to each of us.
If God is for us, who can be against us? We can boldly step into each day, confident that our living, loving, and mighty Savior is with us. The One who is in us is greater than any power in this world! Hallelujah! All glory to God alone. Isaiah 41:10 says: "Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand."
Reflection: Am I faithfully doing the will of God and fulfilling the Gospel mission He has entrusted to me as a response to His amazing love and unwavering faithfulness?
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். உபாகமம் 31:8.
வானத்தையும் பூமியையும் படைத்தவரும், நமது எதிர்காலத்தை வைத்திருப்பவரும், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நுணுக்கமான விவரங்களையும் அறிந்தவருமான நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு முன்னே செல்பவர் என்பதை அறிவதை விட பெரிய சிலாக்கியம் அல்லது ஆசீர்வாதம் எதுவும் இல்லை. அவர் நமக்கு முன்னே செல்வது மட்டுமல்லாமல், அவர் நம்மோடு இருக்கிறார், நமக்குள் வாசம் செய்கிறார்.
ஒருபோதும் பொய் சொல்லாத, தம்முடைய வார்த்தையை மாற்றாத தேவனிடமிருந்து என்ன ஒரு அழகான வாக்குத்தத்தம்! அவர் நம்மை ஒருபோதும் விட்டு விலகமாட்டேன் என்றும் கை விடமாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். மக்கள் நம்மை ஏமாற்றலாம். ஆனால், நம் அன்பான பரம பிதா ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார். அத்தகைய அன்புக்கு நாம் தகுதியற்றவர்கள்; நாம் அவரை பல முறை மறுதலித்தோம், ஆனாலும் அவர் தொடர்ந்து நம்மை நேசிக்கிறார். நாம் அவருடன் ஆட்சி செய்யும்படியாக நம்மை அவரிடம் கொண்டு சேர்ப்பதே அவருடைய இறுதி விருப்பம். அத்தகைய அற்புதமான அன்பை நாம் எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும்? அவருடைய சித்தத்தை செய்து, நம் ஒவ்வொருவருக்கும் அவர் நியமித்த ஊழியத்தை நிறைவேற்றுவதே ஒரே வழி.
தேவன் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்? நமது ஜீவனுள்ள, அன்பான, வல்லமையுள்ள இரட்சகர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நாம் ஒவ்வொரு நாளிலும் தைரியமாக அடியெடுத்து வைக்கலாம். நம்மில் இருப்பவர் இந்த உலகத்தில் எந்த சக்தியையும் விட பெரியவர்! அல்லேலூயா! எல்லாப் புகழும் இறைவனுக்கே. ஏசாயா 41:10 சொல்லுகிறது: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
சிந்திக்க: தேவனுடைய அற்புதமான அன்பிற்கும் அசைக்க முடியாத விசுவாசத்திற்கும் பதிலாக தேவனுடைய சித்தத்தை நான் உண்மையுடன் செய்து, அவர் என்னிடம் ஒப்படைத்த சுவிசேஷ பணியை நிறைவேற்றுகிறேனா?
The lord is with me like a warrior!Beautiful pic of Christ leading !!
ReplyDelete