"Blog Y2 556 - God’s Love Never Fails"
Can a woman forget her nursing child, And not have compassion on the son of her womb? Surely they may forget, Yet I will not forget you. Isaiah 49:15.
The most precious love in this world is a mother’s love. Even if she is far away from her children, her heart and thoughts are still with them. She is willing to sacrifice anything for her child. But even this deep and selfless love can sometimes fail.
Yet, the love of God, the One who created us and chose us, never fails. His love surpasses every other kind of love in this world. We are always on His mind. He sees us, remembers us, and holds us close to His heart every moment. When we feel forgotten or overlooked by the world, we can rest in the assurance that God has never taken His eyes off us.
Before we were born, He had already drawn a beautiful blueprint for our lives. He knows every detail about us. He has reserved and arranged everything we need, things beyond what we could ever imagine. He already sacrificed Himself and demonstrated His perfect love for us. Even now, He continues to intercede and plead on our behalf. Let us draw near to Him today, trusting in His unfailing compassion and everlasting remembrance. Psalm 27:10 says: “When my father and my mother forsake me, Then the Lord will take care of me.”
Reflection: Am I truly trusting that God’s unfailing love surrounds me at all times, even when I feel forgotten, and am I drawing near to Him daily, knowing He always remembers and cares for me?
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49:15.
இந்த உலகில் மிக விலைமதிப்பற்ற அன்பு ஒரு தாயின் அன்பு. அவள் தன் பிள்ளைகளிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், அவளின் மனதும் சிந்தனைகளும் பிள்ளைகளின் மேலேதான் இருக்கும். தன் குழந்தைக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாள். ஆனால் இந்த ஆழமான மற்றும் தன்னலமற்ற அன்புங்கூட சில சமயங்களில் தோல்வியடையக்கூடும்.
ஆனாலும், நம்மைப் படைத்து தேர்ந்தெடுத்த தேவனுடைய அன்பு என்றும் ஒழியாது. அவருடைய அன்பு இந்த உலகத்திலுள்ள மற்ற எல்லா வகையான அன்பையும்விட உயர்ந்தது. நாம் எப்போதும் அவரது மனதில் இருக்கிறோம். அவர் நம்மைப் பார்க்கிறார், நம்மை நினைவுகூர்கிறார், ஒவ்வொரு கணமும் நம்மை அவரது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறார். உலகத்தால் மறக்கப்பட்டதாக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக நாம் உணரும்போது, தேவன் தம்முடைய கண்களை நம்மை விட்டு ஒருபோதும் எடுக்கவில்லை என்ற நிச்சயத்தில் நாம் நிம்மதியாக இருக்கலாம்.
நாம் பிறப்பதற்கு முன்பே, அவர் ஏற்கனவே நம் வாழ்க்கைக்கு ஒரு அழகான திட்டத்தைக் வைத்திருக்கிறார். நம்மைப்பற்றிய ஒவ்வொரு விபரமும் அவருக்கு தெரியும். நாம் கனவு காணாத அதிசயங்களைத் தயாரித்து, ஒவ்வொன்றையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் ஏற்கனவே தம்மைத்தாமே தியாகம் செய்து நம்மீது தமது பரிபூரண அன்பை வெளிப்படுத்தினார். இப்பொழுதும்கூட, அவர் நமக்காக பரிந்து பேசுகிறார், மன்றாடுகிறார். அவரது தவறாத இரக்கத்திலும் நித்திய நினைவிலும் நம்பிக்கை வைத்து, இன்று நாம் அவரிடம் இன்னமும் நெருங்கி வருவோம். சங்கீதம் 27:10 சொல்லுகிறது: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”
சிந்திக்க: தேவனுடைய தவறாத அன்பு எல்லா நேரங்களிலும் என்னைச் சூழ்ந்திருக்கிறது என்று நான் உண்மையிலேயே நம்பி, நான் மறக்கப்பட்டதாக உணரும்போது கூட, அவர் எப்போதும் என்னை நினைவுகூர்ந்து கவனித்துக்கொள்கிறார் என்பதை அறிந்து, தினமும் அவரிடம் நெருங்கி வருகிறேனா?

Thankyou group for the wonderful reminder that God's Love Never Fails
ReplyDeleteYesterday, while writing an email, I accidentally misspelled the word “nurturing” as “nursing.” It made me smile when I noticed it. Then this morning, I came across a verse in today’s devotion that speaks about “nursing” and how God never forgets us! Praise the Lord for His gentle and joyful/jovial ways of connecting with us. He walks with us and knows our every thought. Thank you for these daily devotions—they are such a blessing.
ReplyDeleteJeremiah 1:5 Before I formed you in the womb I knew you, before you were born I set you apart !
ReplyDeleteYou alone know the plans you have for us and you will fulfill them !!
Thank you all for reading our blog and providing your feedback. It encourages us. Please continue to review. If there are any mistakes, please let us know.
ReplyDelete