"Blog Y2 569 - Created for His Glory"

For with You is the fountain of life; In Your light we see light. Psalm 36:9.

We belong to the God who created the heavens and the earth. He is not only the Creator He is also the Owner of all things. Do you know why He created everything in this world? He created it all for you and me.

Before the foundation of the world, He had already prepared everything we would need. He has a beautiful plan for our lives. He knows our past, present, and future. We were in His thoughts even before the creation of the earth. How blessed we are!

He is our source, yes, the fountain of all the blessings of life. The light that comes from Him will make us shine brighter day by day. All we need to do is sit in His presence to receive His light. Let the beauty of Jesus be seen in us. May His light shine upon us and cause us to shine for His glory! John 8:12 says: “Then Jesus spoke to them again, saying, ‘I am the light of the world. He who follows Me shall not walk in darkness, but have the light of life.’” 

Reflection: Am I truly living each day with the awareness that I was created by God for His purpose? Am I seeking His light so I can shine for His glory?

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். சங்கீதம் 36:9.

வானங்களையும் பூமியையும் படைத்த தேவனுக்கு நாம் சொந்தமானவர்கள். அவர் படைப்பவர் மட்டுமல்ல, அவர் எல்லாவற்றிற்கும் உரிமையாளரும் ஆவார். அவர் ஏன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தார் தெரியுமா? அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் அனைத்தையும் படைத்தார்.

உலகம் தோன்றுவதற்கு முன்பே, நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே ஆயத்தம் செய்திருந்தார். அவர் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அழகான திட்டத்தை வைத்திருக்கிறார். அவர் நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அறிவார். பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாம் அவருடைய சிந்தனையில் இருந்தோம். நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

அவரே நம்முடைய ஊற்று, ஆம், ஜீவனுடைய எல்லா ஆசீர்வாதங்களின் ஊற்றுக்கண் அவரே. அவரிடமிருந்து வரும் ஒளி நம்மை நாளுக்கு நாள் பிரகாசிக்கச் செய்யும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய ஒளியைப் பெற அவருடைய சமூகத்தில் அமர்ந்திருப்பதுதான். இயேசுவின் அழகு நம்மில் பிரதிபலிக்கட்டும். அவருடைய ஒளி நம்மீது பிரகாசித்து, அவருடைய மகிமைக்காக நம்மைப் பிரகாசிக்கச் செய்வதாக! யோவான் 8:12 சொல்லுகிறது: “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”

சிந்தனைக்கு: நான் தேவனால் அவருடைய நோக்கத்திற்காக படைக்கப்பட்டேன் என்ற விழிப்புணர்வுடன் ஒவ்வொரு நாளும் உண்மையுடன் வாழ்கிறேனா? அவருடைய மகிமைக்காக நான் பிரகாசிக்கும்படி அவருடைய ஒளியைத் நாடுகிறேனா?

 

Comments

  1. Help us to live the purpose for which we are created .Amen!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"