"Blog Y2 571 - Purpose in God’s Plan"

For whoever does the will of My Father in heaven is My brother and sister and mother. Matthew 12:50.

Lord Jesus once said that doing the will of the Father was His food, that was His only purpose for coming into this world (John 4:34). From His birth to the cross, He lived solely to fulfill the will of God our Father. Now, it is our turn.

No one can enter the Kingdom of God without doing the Father’s will. The Scripture warns us that many will say, “Lord! Lord!” but unless we do the will of the Father, we will not inherit His Kingdom (Matthew 7:21). When we fulfill the very reason God has placed us where we are, His divine purpose for us, we are counted as Christ’s own family. What an amazing privilege it is to be called His brothers and sisters!

Let us stay in His presence and remain inside His will, for that is the safest and most secure place to be. Our own will might seem beautiful at first, but in the end, it can lead to sorrow and destruction. Only God’s will leads to life and peace.

May our hearts and souls long to do the will of our Father in heaven! Yes, we are Jesus Christ’s brothers and sisters, when we live to fulfill His will. John 14:23 says: “Jesus answered and said to him, ‘If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him.’”

Reflection: Am I truly embracing the path God has designed for me, and am I living each day with the intention to honor His plan rather than my own desires?

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். மத்தேயு 12:50.

பிதாவின் சித்தத்தைச் செய்வதே அவருடைய உணவாயிருக்கிறது என்றும், இந்த உலகத்திற்கு வருவதற்கான ஒரே நோக்கம் அதுவே என்றும் கர்த்தராகிய இயேசு ஒருமுறை கூறினார் (யோவான் 4:34). அவருடைய பிறப்பு முதல் சிலுவை வரை, அவர் நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவே வாழ்ந்தார். இப்போது அந்தப் பங்கு நமக்கு வந்துள்ளது.

பிதாவின் சித்தத்தைச் செய்யாமல் யாரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.  "கர்த்தாவே! கர்த்தாவே!" என்று      அநேகர் சொல்வார்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது, ஆனால் நாம் பிதாவின் சித்தத்தின்படி செய்யாவிட்டால், அவருடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (மத்தேயு 7:21). தேவன் நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அந்த இடத்தில் அவருடைய நோக்கத்தை நாம் நிறைவேற்றினால், நாம் கிறிஸ்துவின் குடும்பமாக கருதப்படுகிறோம். அவருடைய சகோதர சகோதரிகள் என்று அழைக்கப்படுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

நாம் அவருடைய பிரசன்னத்தில் நிலைத்திருந்து அவருடைய சித்தத்திற்குள் நிலைத்திருப்போம், ஏனென்றால் அதுவே பாதுகாப்பானதும் நிச்சயமானதுமான இடம். நமது சொந்த விருப்பம் முதலில் அழகாகத் தோன்றலாம், ஆனால் இறுதியில், அது துக்கத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கும். தேவனுடைய சித்தம் மட்டுமே ஜீவனுக்கும் சமாதானத்திற்கும் வழிநடத்துகிறது.

பரலோகத்திலிருக்கிற நமது பிதாவின் சித்தத்தைச் செய்ய நமது இருதயங்களும் ஆத்துமாக்களும் ஏங்குவதாக! ஆம், இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்ற நாம் வாழும்போது, நாம் அவருடைய சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். யோவான் 14:23 சொல்லுகிறது: “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

சிந்திக்க: தேவன் எனக்காக வடிவமைத்த பாதையை நான் உண்மையிலேயே தழுவிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் என் சொந்த ஆசைகளை விட அவருடைய திட்டத்தை மதிக்கும் நோக்கத்துடன் நான் வாழ்கிறேனா?

 

Comments

  1. Indeed it’s an amazing privilege to be called His brothers and sisters.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"