"Blog Y2 573 - Grace Through Humble Hearts"

Therefore, humble yourselves under the mighty hand of God, that He may exalt you in due time. 1 Peter 5:6.

Humbling ourselves before God is one of the greatest challenges we face. Even though we have nothing of our own to boast about, our hearts often become proud. Yet God, in His mercy, understands our weaknesses.

God looks at our hearts, not our achievements, appearances, or possessions, but at our humility. He longs to bless those who bow before Him with a sincere and contrite spirit. He is waiting patiently for us to submit ourselves under His mighty hand, so that He may lift us up in His perfect timing.

May our thoughts, words, and actions be clothed in gentleness and humility. Let us walk in this world not with worldly pride, but with a life that brings glory to our Father in heaven. As we submit to Him daily, may we reflect His beauty, grace, and character to those around us. We are in His hands, safe, loved, and led. Let us humble ourselves before Him and trust in His timing. James 4:10 says: "Humble yourselves in the sight of the Lord, and He will lift you up."

Reflection: Am I willing to lower my own pride and trust God’s timing to lift me up? Am I letting kindness and humility guide how I live each day?

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1 பேதுரு 5:6.

தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவது நமக்குஇருக்கிற மிகப் பெரிய சவால்களில் ஒன்று. பெருமை பாராட்ட நம்மிடம் சொந்தமாக எதுவுமே இல்லாவிட்டாலும், நம் இதயம் அடிக்கடி பெருமைப்படுகிறது. ஆயினும் தேவன், அவருடைய கிருபையினால், நம்முடைய பலவீனங்களைப் புரிந்துகொள்கிறார்.

தேவன் நம்முடைய இருதயங்களைப் பார்க்கிறார், நம்முடைய சாதனைகளையோ, தோற்றங்களையோ அல்லது உடைமைகளையோ அல்ல, ஆனால் நமது மனத்தாழ்மையைப் பார்க்கிறார். அவர் முன்பாக  நேர்மையான மற்றும் நொறுங்குண்ட ஆவியுடன் தங்களைத் தாழ்த்துபவர்களை   ஆசீர்வதிக்க அவர் ஏங்குகிறார். அவருடைய குறித்த நேரத்தில் அவர் நம்மை உயர்த்தும்படி, நாம் அவருடைய பலத்த கரத்தின் கீழ் நம்மை ஒப்புக்கொடுக்க
அவர் பொறுமையுடன் காத்திருக்கிறார்.

நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் சாந்தத்தாலும், மனத்தாழ்மையாலும் அலங்கரிக்கப்படட்டும். இந்த உலகத்தில் உலகப்பிரகாரமான பெருமையோடல்ல, மாறாக பரலோகத்திலிருக்கிற நம் பிதாவை மகிமைப்படுத்தும் ஜீவனோடே நடப்போமாக. நாம் தினந்தோறும் அவருக்கு அடிபணியும்போது, அவரது அழகு, கிருபை மற்றும் இயல்பை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பிரதிபலிப்போம். நாம் அவருடைய கரங்களில் இருக்கிறோம், பாதுகாப்பாக, நேசிக்கப்படுகிறோம், வழிநடத்தப்படுகிறோம். அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, அவருடைய நேரத்தில் நம்பிக்கை வைப்போம். யாக்கோபு 4:10 சொல்லுகிறது:   “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”

சிந்திக்க: தேவன் ஏற்ற காலத்தில் என்னை உயர்த்த என் பெருமையைக் குறைத்து, தேவனின் நேரத்திற்காக  காத்திருக்க நான் தயாராக இருக்கிறேனா? ஒவ்வொரு நாளும் கருணையும் மனத்தாழ்மையும் என்னை வழிநடத்த அனுமதிக்கிறேனா?




 

Comments

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"