"Blog Y2 577 - Secrets Beyond My Sight"
Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know. Jeremiah 33:3.
What a wonderful invitation from our God, the One who holds all power and authority, the King of kings and Lord of lords! As His beloved children, we have been given the privilege and authority to call upon our Heavenly Father at any time.
There are so many hidden things and mysteries that we do not understand. We don’t even know what the next moment holds. But when we stay in constant connection with our Heavenly Father, He promises to reveal what we need to know. He will show us great and mighty things, things beyond our understanding, the secrets and guarded mysteries that He alone knows and chooses to unveil.
He is still working. He is not yet finished!
Our only part is to call upon Him. Heaven is always ready to respond. God is always ready to answer. Let us hold on to this precious promise with faith, humility, and reverence, knowing that our God delights in revealing His wonders to those who seek Him. Psalm 50:15 says: "Call upon Me in the day of trouble; I will deliver you, and you shall glorify Me."
Reflection: Am I staying close enough to hear what God longs to reveal? Am I seeking His wisdom daily, trusting that He delights in unveiling what I could never find on my own?
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3.
சகல வல்லமையையும் அதிகாரத்தையும் உடையவரும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகிய நம்முடைய தேவனிடமிருந்து என்னே ஒரு அதிசயமான அழைப்பு! அவரது அன்பான பிள்ளைகளாக, எந்த நேரத்திலும் நமது பரலோக பிதாவை நோக்கிக் கூப்பிட நமக்கு சிலாக்கியமும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
நமக்குப் புரியாத பல மறைவான விஷயங்களும் மர்மங்களும் உள்ளன. அடுத்த கணம் என்ன நடக்கும் என்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் நமது பரலோக பிதாவுடன் நாம் நிலையான தொடர்பில் நிலைத்திருக்கும்போது, நாம் அறிய வேண்டியதை வெளிப்படுத்துவதாக அவர் வாக்களிக்கிறார். அவர் மட்டுமே அறிந்த மற்றும் வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கும் பெரிய மற்றும் வல்லமையான காரியங்களையும், நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும், இரகசியங்களையும் பாதுகாக்கப்பட்ட இரகசியங்களையும் நமக்குக் வெளிப்படுத்துவார்.
அவர் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இன்னும் அவர் முடிக்கவில்லை!
நாம் செய்ய வேண்டியது ஒன்றே, அவரை நோக்கி அழைக்க வேண்டும். பரலோகம் எப்போதும் பதிலளிக்கத் தயாராகவே இருக்கிறது. தேவன் எப்போதும் பதிலளிக்க தயாராக இருக்கிறார். நமது தேவன் தம்மைத் தேடுகிறவர்களுக்கு தம்முடைய அதிசயங்களை வெளிப்படுத்துவதில் பிரியப்படுகிறார் என்பதை அறிந்து, இந்த விலைமதிப்பற்ற வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடும், தாழ்மையோடும், பயபக்தியோடும் பற்றிக்கொள்வோமாக. சங்கீதம் 50:15 சொல்லுகிறது: “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”
சிந்திக்க: தேவன் வெளிப்படுத்த விரும்புவதைக் கேட்கும் அளவுக்கு நான் அவரோடு நெருக்கமாக இருக்கிறேனா? நான் ஒருபோதும் சொந்தமாக கண்டுபிடிக்க முடியாததை வெளிப்படுத்துவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று நம்பி, நான் தினமும் அவரது ஞானத்தைத் தேடுகிறேனா?
We learnt this as Christ’s phone number Jeremiah 33.3 Call upon me and I will answer you ! Indeed he does ! Amen !
ReplyDelete