"Blog Y2 586 - Rescued, Redeemed, Forever Free"


Blessed be the Lord, Who daily loads us with benefits, The God of our salvation! Psalm 68:19.

This powerful verse reveals three beautiful truths that encourage us to praise and trust our God.

First: Call to bless the Lord 
It begins with a call to bless the Lord, reminding us to offer continual praise to God, who is the source of every blessing in our lives. He alone is worthy of all honor and glory.

Second: God, who is deeply personal and present 
We see a God who is deeply personal and present. He daily loads us with benefits. He doesn’t just help us occasionally, but 24/7. He carries our burdens and walks with us through every moment. He is actively involved in every detail of our lives. He never leaves us nor forsakes us. He not only sees our problems but also holds the solution for every one of them, whether physical or spiritual.

Third: God of our salvation 
The verse declares that He is the God of our salvation. This means that He rescues and delivers us not only from physical danger and the enemy’s evil plans, but also from spiritual death. He alone can redeem us from a life of sin and lead us into eternal life.

So let us praise the Lord with all our hearts, for He is our blesser, burden-bearer, redeemer, protector, and Savior. Blessed be the name of the Lord! Philippians 4:19 says: "And my God shall supply all your need according to His riches in glory by Christ Jesus."

Reflection: Am I entirely relying on the One who cares for every part of my life and rescues me from all harm, trusting in His constant help and redemption?

எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19.

இந்த சக்திவாய்ந்த வசனம் நம் கடவுளைப் போற்றவும் நம்பவும் நம்மை உற்சாகப்படுத்தும் மூன்று அழகான சத்தியங்களை வெளிப்படுத்துகிறது.

முதலாவது: கர்த்தரைத் துதிப்பதற்கான அழைப்பு
இது கர்த்தரைத் துதிப்பதற்கான அழைப்புடன் தொடங்குகிறது. நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தின் ஆதாரமாகிய தேவனுக்குத் தொடர்ச்சியான ஸ்தோத்திரத்தைச் செலுத்த இது நமக்கு நினைவூட்டுகிறது. அவர் ஒருவரே எல்லா கனத்திற்கும் மகிமைக்கும் தகுதியானவர்.

இரண்டாவது: தனிப்பட்ட மற்றும் நித்தியமான கடவுள்
ஆழமாகத் தனிப்பட்டவரும் நித்தியமானவருமான ஒரு தேவனை நாம் காண்கிறோம். அவர் தினமும் நமக்கு நன்மை செய்கிறார். அவர் எப்போதாவது நமக்கு உதவுவது மட்டுமல்ல, ஆனால் 24/7 நம் பாரத்தை சுமந்து, ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடும் நடக்கிறார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு விவரத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார். அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதும் இல்லை, நம்மைக் கைவிடுவதும் இல்லை. அவர் நம் பிரச்சனைகளைக் காண்பது மட்டுமல்லாமல், சரீரப்பிரகாரமானதாகவோ அல்லது ஆவிக்குரியதாகவோ இருந்தாலும், அவற்றுக்கான தீர்வையும் வைத்திருக்கிறார்.

மூன்றாவது: நம் இரட்சிப்பின் தேவன்
அவர் நம் இரட்சிப்பின் தேவன் என்று வசனம் அறிவிக்கிறது. அதாவது, அவர் நம் சரீரத்தை பேராபத்திலிருந்தும் எதிரியின் தீய திட்டங்களிலிருந்தும் மட்டுமல்லாமல், ஆவிக்குரிய மரணத்திலிருந்தும் காப்பாற்றி விடுவிக்கிறார். பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டு, நித்திய ஜீவனுக்குள் வழிநடத்த அவரால் மட்டுமே முடியும்.

ஆகவே, நம் முழு இருத்தோடும் கர்த்தரைத் துதிப்போம், ஏனெனில் அவர் நம்மை ஆசீர்வதிப்பவர், சுமந்து தாங்குபவர், மீட்பர், பாதுகாவலர் மற்றும் இரட்சகர். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக! பிலிப்பியர் 4:19 சொல்லுகிறது: “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” 

சிந்திக்க: நான் என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்து, எல்லாத் தீங்கிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிற ஒருவரை முழுமையாகச் சார்ந்து, அவருடைய மாறாத உதவியையும் மீட்பையும் நம்புகிறேனா?

Comments

  1. இரட்சிக்கிற தேவன் அவரே Amen

    ReplyDelete
  2. God will provide for all of your needs, both physical and spiritual, through the abundance of His riches and the grace of Christ.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"