But now, O Lord, You are our Father; We are the clay, and You our potter; And all we are the work of Your hand. Isaiah 64:8.
We are all redeemed by the precious blood of Jesus, but even now, we remain in God’s hands, continually being molded and shaped according to His perfect will. It is a beautiful and humble prayer to fully surrender ourselves into the hands of our Potter.
When we are redeemed, we become His children. As our loving Father, He takes special care to shape us and mold us to reflect His image. Though we are human, frail, and imperfect, we are held in the hands of our perfect and holy God.
Throughout our earthly journey, until we see Him face to face in eternal life, He continues His careful, patient work in us, forming us, refining us, and transforming us into His likeness.
Let this be the posture of our hearts: a daily surrender, saying, “Father, I am the clay, You are my Potter. Shape me according to Your will.” He alone is our Creator. He remains our Father, gently and lovingly working in us each moment. Jeremiah 18:6 says: “O house of Israel, can I not do with you as this potter?' says the LORD. 'Look, as the clay is in the potter’s hand, so are you in My hand, O house of Israel!”
Reflection: Am I daily yielding myself to God’s guidance, allowing Him to gently shape my character, or am I resisting His work in my life despite His loving care?
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. ஏசாயா 64:8.
நாம் அனைவரும் இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளோம், ஆனால் எப்போதும், நாம் தேவனுடைய கைகளில் இருக்கிறோம், அவருடைய பரிபூரண சித்தத்தின்படி தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்படுகிறோம். நம்மை முழுமையாக நம்முடைய குயவனாகிய தேவனுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறோம் என்று சொல்வது ஒரு அருமையான தாழ்மையின் ஜெபம்.
நாம் மீட்கப்படும்போது, நாம் அவருடைய பிள்ளைகளாக மாறுகிறோம். நம்முடைய அன்பான பிதாவாக, அவர் தம்முடைய சாயலைப் பிரதிபலிக்க நம்மை வடிவமைக்கவும் உருவாக்கவும் விசேஷித்த கவனம் எடுத்துக்கொள்கிறார். நாம் மனிதர்களாய், பலவீனர்களாய், குறைபாடுள்ளவர்களாய் இருந்தாலும், நம்முடைய பரிபூரணமும் பரிசுத்தமுமான தேவனுடைய கைகளில் இருக்கிறோம்.
நம்முடைய பூமிக்குரிய பயணத்தில், நித்திய ஜீவனில் அவரை முகமுகமாய்க் காணும்வரை, அவர் நம்மில் அவருடைய கவனமான, பொறுமையான வேலையைத் தொடர்கிறார், நம்மை உருவாக்குகிறார், சீர்ப்படுத்துகிறார், மேலும் அவருடைய சாயலாக நம்மை மாற்றுகிறார்.
இதுவே நம் இருதயங்களின் நிலைப்பாடாக இருக்கட்டும்: "அப்பா, நான் களிமண், நீர் என் குயவன். உம்முடைய சித்தத்தின்படி என்னை வனையும்" என்று ஒப்புக்கொடுத்து சரணடைவோம். அவர் ஒருவரே நம் சிருஷ்டிகர். அவர் நம் பிதாவாகவே இருக்கிறார், ஒவ்வொரு கணமும் நம்மை மென்மையாகவும் அன்பாகவும் உருவாக்குகிறார். எரேமியா 18:6 கூறுகிறது: "இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்."
சிந்திக்க: நான் தினமும் என்னை தேவனுடைய வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து, என் குணத்தை மெதுவாக வடிவமைக்க அவரை அனுமதிக்கிறேனா, அல்லது அவருடைய அன்பான பராமரிப்பு இருந்தபோதிலும் என் வாழ்க்கையில் அவர் என்னை உருவாக்க நான் எதிர்க்கிறேனா?
Isaiah 64:8 “But now, O Lord, thou art our Father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand."
ReplyDeleteSo beautifully said .
Talks about God’s sovereignty over us ,his creation!
Amen 🙏
ReplyDelete