"Blog Y2 624 - "Joyfully, Lift His Name"

Oh come, let us sing to the Lord! Let us shout joyfully to the Rock of our salvation. Psalms 95:1.

Our Lord God Almighty is the only true God who deserves all glory and honor. His glory cannot be shared with anything or anyone. He created us and appointed us to praise and glorify Him, not only through singing, but especially through our lives.

Our lifestyle should reflect and proclaim the greatness of our Almighty God. Above all, He lifted us out of the filthy pit, graciously granted us salvation, and called us righteous! What a privilege it is to be His beloved children.

He alone is the One who saved us. No one else has the power to rescue us from darkness. Therefore, we must sing and shout with joy, for He is the Rock of our salvation. Our God is mighty to save! Psalm 98:4 says: “Make a joyful shout to the Lord, all the earth; Break forth and sing for joy, yes, sing praises.”

Let us come together, sing joyfully, and lift up the name of our Triune God in glory and praise.
Hallelujah!

Reflection: Am I celebrating the greatness of my Savior with heartfelt joy, allowing my life, words, and worship to reflect the praise and gratitude He truly deserves every day?

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:1.

நம்முடைய கர்த்தராகிய சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே எல்லா மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரான ஒரே உண்மையான தேவன். அவருடைய மகிமையை எதனுடனும் அல்லது யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அவர் நம்மைப் படைத்து, பாடுவதன் மூலம் மட்டுமல்லாமல், குறிப்பாக நம்முடைய வாழ்க்கை மூலமாக அவரைத் துதித்து மகிமைப்படுத்தும்படி நியமித்தார்.

நம்முடைய வாழ்க்கை முறை நம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகத்துவத்தைப் பிரதிபலித்து அறிவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நம்மை அழுக்கடைந்த படுகுழியிலிருந்து தூக்கி எடுத்தார், கிருபையாக இரட்சிப்பை அருளினார், மேலும் நம்மை நீதிமான்கள் என்று அழைத்தார்! அவருடைய பிரியமான பிள்ளைகளாக இருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்.

அவர் ஒருவரே நம்மை இரட்சித்தவர். இருளிலிருந்து நம்மை மீட்க வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆகையால், நாம் மகிழ்ச்சியுடன் பாடி முழங்க வேண்டும், ஏனென்றால் அவரே நம் இரட்சிப்பின் கன்மலை. நம் தேவன் இரட்சிக்க வல்லவர்! சங்கீதம் 98:4 சொல்லுகிறது: "பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்."

நாம் ஒன்றுசேர்ந்து , மகிழ்ச்சியுடன் பாடி, நம்முடைய திரித்துவ தேவனுடைய நாமத்தை மகிமையிலும் துதியிலும் உயர்த்துவோம்.
அல்லேலூயா!

சிந்திக்க: என் வாழ்க்கையையும், வார்த்தைகளையும், துதியையும் தேவனுக்கு தகுதியான நன்றியையும் ஒவ்வொரு நாளும் பிரதிபலிக்க அனுமதித்து, என் இரட்சகரின் மகத்துவத்தை நான் இருதயப்பூர்வமான மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறேனா?

 

Comments

  1. Shout joyfully to the LORD, all the earth; Break forth in song, rejoice, and sing praises.You are worthy of praise lord for you answer us .We exalt you ! Amen

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"