"Blog Y2 656 - "Kindness Leads to Forgiveness"
And be kind to one another, tenderhearted, forgiving one another, even as God in Christ forgave you. Ephesians 4:32.
Where there is kindness, there will also be forgiveness. Jesus Christ is our ultimate role model. When we were still sinners, He was gracious toward us and redeemed us with His love. Unlike us, who often see only the outward appearance, Jesus looks at the heart.
When someone wrongs us, we are called to have the Spirit of Christ, to forgive them just as He forgave us. That is true kindness.
Let us ask our loving Father to fill us with His love, just as He has loved us. Let us pray for eyes filled with compassion, hearts overflowing with love, and the empathy needed to care for others. And just as God has forgiven us, let us forgive and forget completely those who have wronged us. Colossians 3:13 says: "Bearing with one another, and forgiving one another, if anyone has a complaint against another; even as Christ forgave you, so you also must do."
Reflection: Am I allowing the love of Christ to shape my heart so that I can respond with gentleness, compassion, and a forgiving spirit even when I feel deeply hurt by others?
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32.
கிருபை எங்கேயிருக்கிறதோ, அங்கே மன்னிப்பும் இருக்கும். இயேசு கிறிஸ்துவே நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. நாம் இன்னும் பாவிகளாயிருந்தபோதே, அவர் நமக்குக் கிருபையுள்ளவராய் இருந்து, தமது அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டார். வெளியரங்கமான தோற்றத்தை மட்டுமே பார்க்கும் நம்மைப் போலன்றி, இயேசு இருதயத்தைப் பார்க்கிறார்.
ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும்போது, கிறிஸ்துவுக்குரிய மனப்பான்மையுடன், அவர் நம்மை மன்னித்ததுபோல, நாம் அவர்களை மன்னிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதுவே உண்மையான இரக்கம்.
அவர் நம்மை நேசித்தபடியே, நம்முடைய அன்புள்ள பிதா அவருடைய அன்பினால் நம்மை நிரப்பும்படி கேட்போம். இரக்கமுள்ள கண்களுக்காகவும், அன்பினால் பெருகும் இருதயத்திற்காகவும், மற்றவர்களைப் பராமரிக்கத் தேவையான மனதுருக்கத்திற்காகவும் ஜெபிப்போம். தேவன் நம்மை மன்னித்தது போலவே, நமக்குத் தீங்கு செய்தவர்களை நாம் மன்னித்து, முற்றிலும் மறந்துவிடுவோமாக. கொலோசெயர் 3:13 சொல்லுகிறது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
சிந்திக்க: நான் மற்றவர்களால் ஆழமாகக் காயப்படுத்தப்பட்டாலும், கிறிஸ்துவினுடைய அன்பு என் இருதயத்தை வடிவமைக்க நான் அனுமதித்து, அதனால் நான் சாந்தத்தோடும், மனதுருக்கத்தோடும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் நடந்துகொள்கிறேனா?

Be with us and guide us Lord to demonstrate your love.Amen
ReplyDelete