"Blog Y2 658 - "God Hears the Humble"
For the Lord hears the poor, and does not despise His prisoners. Psalm 69:33.
Our God listens, and He answers. In His holy presence, every one of us is needy, even when we are not poor in money. There are empty rooms in the heart that no earthly thing can fill. Yet our Father delights to hear us: “Before they call, I will answer; while they are still speaking, I will hear” (Isa. 65:24). He invites us to ask so that our joy may be full (John 16:24).
The “prisoners” He does not despise are not only those behind physical bars. Many of us carry hidden chains of fear, guilt, addiction, bitterness, anxiety, or sin. But Jesus came “to proclaim liberty to the captives” (Isa.. 61:1; Luke 4:18). When we call on Him, He breaks bonds we cannot break ourselves (Ps. 107:13–14). So we come boldly to the throne of grace, certain that His ear is near to the humble.
Reflection: Am I bringing the hidden emptiness of my heart to the Lord in prayer, trusting that He listens, cares, and can break the chains that I cannot remove on my own?
கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். சங்கீதம் 69:33.
நம்முடைய தேவன் கேட்கிறார், பதில் தருகிறார். அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில், நாம் பணத்தால் ஏழைகளாக இல்லாவிட்டாலும்கூட, நம் ஒவ்வொருவரும் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம். மனிதனால் உண்டாகக்கூடிய எந்தவொரு காரியத்தினாலும் நிரப்ப முடியாத வெறுமையான அறைகள் இருதயத்தில் உண்டு. ஆனால் நம்முடைய பிதா நம்முடைய சத்தத்தைக் கேட்பதில் மகிழ்ச்சியடைகிறார்: “அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா. 65:24). நம்முடைய மகிழ்ச்சி நிறைவாகும்படி கேட்கும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார் (யோவான் 16:24).
“சிறைப்பட்டவர்கள்” , அவர் வெறுக்காமலிருக்கிறது சரீர ரீதியான சிறைச்சாலையில் இருப்பவர்களை மட்டுமல்ல. நம்மில் பலர் மறைவான சங்கிலிகளாகிய பயம், குற்ற உணர்வு, அடிமைத்தனம், கசப்பு, கவலை, அல்லது பாவத்தைச் சுமக்கிறோம். ஆனால் இயேசு “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரகடனப்படுத்த” வந்தார் (ஏசா. 61:1; லூக்கா 4:18). நாம் அவரை நோக்கி அழைக்கும்போது, நாமே உடைக்க முடியாத அடிமைத்தனங்களை அவர் உடைக்கிறார் (சங். 107:13-14). எனவே, அவருடைய காது தாழ்மையுள்ளவர்களுக்கு அருகில் இருக்கிறது என்ற நிச்சயத்துடன் கிருபையின் சிங்காசனத்திற்கு தைரியமாக வருவோமாக.
சிந்தனை: தேவன் கேட்கிறார், அக்கறை கொள்கிறார், என்னால் சொந்தமாக நீக்க முடியாத சங்கிலிகளை உடைக்க அவரால் முடியும் என்று நம்பி, என் இருதயத்தின் மறைந்திருக்கிற வெறுமையைக் கர்த்தரிடம் ஜெபத்தில் கொண்டுவருகிறேனா?

Amen 🙏
ReplyDeletePraise the Lord
Indeed God listens and he answers !
ReplyDelete