Blog Y3 667 - "Trust Brings Lasting Joy"

But let all those rejoice who put their trust in You; Let them ever shout for joy, because You defend them; Let those also who love Your name be joyful in You. Psalms 5:11.

We are truly blessed and favored children when we place our trust fully in God. Sometimes we say we trust Him, but deep down in our hearts, we still rely on human strength or powerful people in this world. We often forget how great and mighty our God is!

When we truly trust Him, we can rest knowing that He will guide and protect us in every situation. He never abandons those who put their hope in Him. Instead of worrying, we can keep praising Him with confidence and shout for joy, because we are safe under His mighty hands.

And when we begin to love His Name with all our heart, that love overflows within us, filling us with unshakable joy. Let us trust Him more deeply and love Him more wholeheartedly, and we will see His marvelous wonders unfold in our lives. Psalm 33:21 says: “For our heart shall rejoice in Him, because we have trusted in His holy name.”

Reflection: Am I truly relying on God with all my heart, or do I still depend on my own strength and the help of people around me, instead of resting in His power, love, and unfailing protection?

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. சங்கீதம் 5:11.

நாம் முழுவதுமாக தேவனிடத்தில் நம்பிக்கை வைக்கும்போது, நாம் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், விருப்பமான பிள்ளைகளுமாக இருக்கிறோம். சில சமயங்களில் நாம் அவரை நம்புவதாகச் சொல்கிறோம், ஆனால் நம் இருதயத்தின் ஆழத்தில், நாம் இன்னும் மனித பலத்தையோ அல்லது இந்த உலகில் உள்ள பலம் பொருந்திய மனிதர்களையோ நம்பியிருக்கிறோம். நம்முடைய தேவன் எவ்வளவு பெரியவர், எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்!

நாம் அவரை உண்மையாகவே நம்பும்போது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் நம்மை வழிநடத்துவார், பாதுகாப்பார் என்பதை அறிந்து நாம் அமைதியாக இருக்கலாம். அவரில் நம்பிக்கை வைப்பவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. கவலைப்படுவதற்குப் பதிலாக, நாம் தைரியத்துடன் அவரைத் தொடர்ந்து துதித்து, மகிழ்ச்சியுடன் கெம்பீரிப்போம், ஏனென்றால் நாம் அவருடைய வல்லமையுள்ள கரங்களின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறோம்.

நாம் அவருடைய நாமத்தை நம்முடைய முழு இருதயத்தோடும் நேசிக்கத் தொடங்கும்போது, அந்த அன்பு நமக்குள்ளே வழிந்தோடி, அசைக்க முடியாத மகிழ்ச்சியால் நம்மை நிரப்புகிறது. நாம் அவரை இன்னும் ஆழமாக நம்பி, இன்னும் முழு இருதயத்தோடு அவரை நேசிப்போம், அப்போது நம்முடைய வாழ்க்கையில் அவருடைய அற்புதமான அதிசயங்கள் வெளிப்படுவதைக் காண்போம். சங்கீதம் 33:21 கூறுகிறது: “அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்”

சிந்திக்க: என்னுடைய சொந்த பலத்தையும், என்னைச் சுற்றியுள்ளவர்களின் உதவியையும் நம்புவதற்குப் பதிலாக, நான் என்னுடைய முழு இருதயத்தோடும் உண்மையிலேயே தேவனை நம்பி, அவருடைய வல்லமையிலும், அன்பிலும், மாறாத பாதுகாப்பை சார்ந்து  இருக்கிறேனா?


 

Comments

  1. Yes! Let us rejoice that He protects us always !

    ReplyDelete
  2. Those who love Lords name be joyful !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"