For His merciful kindness is great toward us, and the truth of the Lord endures forever. Praise the Lord! Psalm 117:2.
How often we forget to reflect on God’s grace and faithfulness in our lives! We take so many blessings for granted, yet without His grace, we could not even take a single step.
God has poured out His abundant grace upon us, grace that sustains, protects, and leads us each day. We only see the present moment, but our God knows every moment of our past, present, and future. He has given us countless promises, and unlike human promises that can fail, His promises are unshakable. He will never change His mind, for His faithfulness endures forever. (Numbers 23:19; Lamentations 3:22-23).
When we truly experience His grace and faithfulness, we cannot remain silent. Our hearts must overflow with praise, just like the psalmist. Yes, His love, grace, and faithfulness endure forever!
He has conquered our hearts with His unfailing, unconditional love and grace. He never gives up on us, no matter how many times we fail.
So, come on! Let us lift our voices together and shout HALLELUJAH to the One who never lets go of us!
Reflection: Am I pausing to remember how I have been carried by God’s grace and upheld by His unchanging faithfulness, and am I lifting my voice in gratitude for His endless love that never lets me go?
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா. சங்கீதம் 117:2.
நம் வாழ்வில் தேவனுடைய கிருபையையும் உண்மையையும் சிந்தித்துப்பார்ப்பதை நாம் எத்தனை முறை மறந்துவிடுகிறோம்! நாம் பல ஆசீர்வாதங்களை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் அவருடைய கிருபை இல்லாமல் நாம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.
தேவன் தமது மிகுந்த கிருபையை நம்மேல் பொழிந்திருக்கிறார். அந்தக் கிருபை நம்மை ஒவ்வொரு நாளும் தாங்குகிறது, பாதுகாக்கிறது, வழிநடத்துகிறது. நாம் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கிறோம், ஆனால் நம் தேவன் நம்முடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் அறிந்திருக்கிறார். அவர் நமக்கு எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார், அவை முறிந்துபோகக்கூடிய மனித வாக்குறுதிகளைப் போலல்லாமல், அசைக்க முடியாதவை. அவருடைய உண்மை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதால், அவர் ஒருபோதும் தம் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார். (எண்ணாகமம் 23:19; புலம்பல் 3:22-23).
நாம் அவருடைய கிருபையையும் உண்மையையும் உண்மையாக அனுபவிக்கும்போது, நம்மால் அமைதியாக இருக்க முடியாது. சங்கீதக்காரனைப் போலவே நம் இருதயங்களும் துதியினால் நிரம்பி வழிய வேண்டும். ஆம், அவருடைய அன்பு, கிருபை, உண்மை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்!
தம்முடைய மாறாத, நிபந்தனையற்ற அன்பினாலும் கிருபையினாலும் அவர் நம் இருதயங்களை வென்றிருக்கிறார். நாம் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
ஆகவே, நாம் அனைவரும் சேர்ந்து, நம்மை ஒருபோதும் கைவிடாத தேவனை “அல்லேலூயா” என்று குரல்களை உயர்த்தி ஆர்ப்பரிப்போம்!
சிந்தனை: தேவனுடைய கிருபையால் நான் தாங்கப்பட்டதையும், அவருடைய மாறாத உண்மையால் நான் நிலைநிறுத்தப் பட்டதையும் நினைவுகூர்ந்து என்னை ஒருபோதும் கைவிடாத அவருடைய முடிவில்லாத அன்பிற்காக நன்றியோடு என் குரலை உயர்த்தித் துதிக்கிறேனா?
இதைப்படித்ததாலோ என்னவோ இன்று பலரும் குரல் உயர்த்தி பாடுவதை கேட்க முடிந்ததது. அல்லேலூயா, திதி அல்லேலூயா!
ReplyDeleteWe exalt you with praise Lord,Christ’s love can break barriers and he performs miracles that we talk about all our lives.Psalms 127 says we look up to the mountains ,where does the help come from .Our help comes from the lord the maker of heaven and earth .His mercy endures for ever !
ReplyDelete