Blog Y3 682 - "Guarded by His Salvation"

Restore to me the joy of Your salvation, and uphold me by Your generous Spirit. Psalms 51:12.

Salvation is the most precious gift in this world. God has graciously given us salvation, but we must remain steadfast in it until our very last breath. On our own, this is not possible, but what is impossible for us becomes possible only through our God. That is why He has given us the Holy Spirit to dwell within us.

We should enter into His presence every moment of our lives. It is not limited to kneeling or taking a particular posture, because His presence already abides in us. What we truly need is to recognize His presence, rely completely on Him, and allow Him to guide us and keep us safe throughout our spiritual journey until the very end.

Let us make it our constant prayer to restore to us the joy of His salvation. As human beings, we may stumble or slip away from His divine plan, but our Lord, who protects us, is always with us. May this become our daily prayer: that the joy of salvation will never fade from us, and that His generous Spirit will uphold us every day. Jude 1:24 says: “Now to Him who is able to keep you from stumbling, And to present you faultless Before the presence of His glory with exceeding joy.”

Reflection: Am I trusting God to preserve my salvation daily, relying on His Spirit to guide, protect, and uphold me so that I remain steadfast and walk joyfully in His presence all my life?

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். சங்கீதம் 51:12.

இரட்சிப்பு இந்த உலகிலேயே மிகவும் விலைமதிப்பற்ற பரிசு. தேவன் கிருபையினால் நமக்கு இரட்சிப்பை அளித்துள்ளார், ஆனால் நம்முடைய கடைசி மூச்சு வரை நாம் அதிலே உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். நம் சொந்த முயற்சியில் இது சாத்தியமில்லை, ஆனால் நமக்கு எது கூடாதோ அது நம்முடைய தேவனாலே மட்டுமே கூடும். அதனால்தான் அவர் பரிசுத்த ஆவியானவரை நமக்குள்ளே வாசம்பண்ணக் கொடுத்துள்ளார்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவருடைய பிரசன்னத்தில் பிரவேசிக்க வேண்டும். அது முழங்காலில் நிற்பதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிலையை எடுப்பதற்கோ மட்டும் வரம்பிடப்படவில்லை, ஏனெனில் அவருடைய பிரசன்னம் ஏற்கனவே நமக்குள்ளே நிலைத்திருக்கிறது. நாம் உண்மையில் செய்ய வேண்டியது அவருடைய பிரசன்னத்தை அங்கீகரித்து, அவரை முழுமையாக நம்பி, நம்முடைய ஆவிக்குரிய பயணத்தின் இறுதிவரை நம்மை வழிநடத்தவும் பாதுகாக்கவும் அவருக்கு இடமளிப்பதே.

அவருடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை நமக்குத் திரும்பத் தரும்படி நாம் இடைவிடாமல் ஜெபிப்போம். மனிதர்களாகிய நாம் அவருடைய தெய்வீகத் திட்டத்திலிருந்து தடுமாறலாம் அல்லது விலகிச் செல்லலாம், ஆனால் நம்மைப் பாதுகாக்கிற நம் கர்த்தர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். இரட்சிப்பின் சந்தோஷம் நம்மைவிட்டு ஒருபோதும் நீங்காமலும், அவருடைய உற்சாகமான ஆவி நம்மை ஒவ்வொரு நாளும் தாங்கும்படியாகவும்  ஜெபிப்பது,  நம்முடைய தினசரி ஜெபமாக மாறட்டும். யூதா 1:24 சொல்லுகிறது: "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,"

சிந்திக்க: என்னுடைய இரட்சிப்பைத் தினந்தோறும் பாதுகாக்க தேவன்மேல் நான் நம்பிக்கை வைத்து,  நான் உறுதியாய் அவரில் நிலைத்திருக்கவும், என் வாழ்நாள் முழுவதும் அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சியுடன் நடக்கவும், அவருடைய ஆவியானவர் என்னை வழிநடத்தவும், பாதுகாக்கவும், தாங்கவும் நான் அவரைச் சார்ந்திருக்கிறேனா?



 

Comments

  1. We are saved by the holyspirit and are faultless as it is said in Romans 8:26 And the Holy Spirit helps us in our weakness. For example, we don’t know what God wants us to pray for. But the Holy Spirit prays for us with groanings that cannot be expressed in words.Amen !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"