But I say to you, love your enemies, bless those who curse you, do good to those who hate you, and pray for those who spitefully use you and persecute you. Matthew 5:44.
The Sermon on the Mount is one of the most precious teachings of our Lord Jesus Christ. In it, He reveals the true heart of Christian living, "LOVE". Love is the foundation of a genuine Christian life.
Jesus teaches us to love not only those who love us but even our enemies. Humanly, this is extremely difficult, even impossible. But as the Lord said, “With God all things are possible.” (Matthew 19:26) When we walk closely with Jesus, when He becomes our dearest friend and soul companion, His nature begins to reflect in us.
When we were once enemies of God, Christ still loved us. He forgave us, saved us, and filled us with the joy of salvation. In the same way, Jesus calls us to do good to those who hate us and pray for those who persecute us. Though this may feel hard, it becomes possible when we are filled with the love and compassion of our Heavenly Father. Jesus showed us His example at the cross by saying, “Father, forgive them, for they do not know what they do.” (Luke 23:34).
Let us therefore ask our Father God to fill our hearts with His divine love, the love that forgives, blesses, and overcomes evil with good. May the beauty of Jesus Christ be seen in us as we walk daily in His footsteps.
Reflection: Am I allowing God’s love to shape my thoughts and actions, so that even when I face unkindness or opposition, I can respond with the same compassion that Jesus showed to me?
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44.
மலைப்பிரசங்கம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற போதனைகளில் ஒன்றாகும். அதில், அவர் கிறிஸ்தவ வாழ்க்கையின் உண்மையான இருதயத்தை வெளிப்படுத்துகிறார், "அன்பு". ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அன்பே அஸ்திபாரமாகும்.
நம்மை நேசிப்பவர்களை மட்டுமல்ல, நம்முடைய சத்துருக்களையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். மனிதரீதியாக, இது மிகவும் கடினமானது, சொல்லப்போனால், இது சாத்தியமற்றது. ஆனால் கர்த்தர் சொன்னதுபோல, “தேவனால் எல்லாம் கூடும்” (மத்தேயு 19:26). நாம் இயேசுவோடு நெருங்கி நடக்கும்போது, அவர் நம்முடைய பிரியமான நண்பராகவும், ஆத்துமாவின் துணையாகவும் மாறும்போது, அவருடைய சுபாவம் நமக்குள்ளே பிரதிபலிக்கத் தொடங்குகிறது.
நாம் ஒரு காலத்தில் தேவனுடைய சத்துருக்களாக இருந்தபோதும்கூட, கிறிஸ்து நம்மை நேசித்தார். அவர் நம்மை மன்னித்தார், இரட்சித்தார், இரட்சிப்பின் சந்தோஷத்தால் நம்மை நிரப்பினார். அதேபோல, நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும், நம்மைத் துன்பப்படுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் இயேசு நம்மை அழைக்கிறார். இது கடினமானதாக உணரப்பட்டாலும், நம்முடைய பரம பிதாவின் அன்பினாலும் இரக்கத்தினாலும் நாம் நிரப்பப்படும்போது இது சாத்தியமாகிறது. "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று சிலுவையில் இயேசு சொன்னதன் மூலம் நமக்குத் தம்மை ஒரு மாதிரியாகக் காண்பித்தார் (லூக்கா 23:34).
ஆகையால், மன்னித்து, ஆசீர்வதித்து, தீமையை நன்மையால் ஜெயிக்கிற அவருடைய தெய்வீக அன்பினால் நம்முடைய இருதயங்களை நிரப்பும்படி நம்முடைய பிதாவாகிய தேவனிடம் கேட்போமாக. நாம் அவருடைய அடிச்சுவடுகளில் தினமும் நடக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் அழகு நம்மில் காணப்படுவதாக.
சிந்தனை: நான் இரக்கமில்லாத அல்லது எதிர்ப்பான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதும், இயேசு எனக்குக் காண்பித்த அதே இரக்கத்துடன் என்னால் பதிலளிக்க முடியும்படி, தேவனுடைய அன்பு என் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைக்க நான் அனுமதிக்கிறேனா?
இந்த ஒரு வசனத்தை மட்டும் உலக நாடுகள் கடைப்பிடித்தால் வன்முறை ஏது?போர்கள் ஏது??சாவுகள் ஏது? துன்பங்கள் ஏது?
ReplyDeleteThough it is impossible but with God all things are possible is extra ordinary !
ReplyDelete