Depart from evil, and do good; And dwell forevermore. Psalm 37:27.
Our lives should reflect the influence of God within us. When Jesus walked on this earth, He went about doing good wherever He went. He never entertained or participated in evil. To truly fear God is to turn away from evil.
When we received salvation, God graciously gave us the Holy Spirit, the precious gift who guides us into all truth and leads us on the right path. The Holy Spirit helps us discern and avoid evil. Our conscience, enlightened by His Spirit, clearly tells us what is wrong and what displeases God.
But avoiding evil alone is not enough. We are called to do good. God has placed many opportunities around us to show His goodness, particularly to those who are hungry, thirsty, needy, helpless, and abandoned. Through these moments, He invites us to reflect on His love and compassion.
Let us pray and ask God to protect us from every form of evil and open our eyes to recognize the needs around us, so that we may act with love and kindness. As our Heavenly Father has promised, when we choose to depart from evil and do good, He will crown our lives with His goodness, and we will dwell in His presence forever.
Reflection: Am I allowing the Holy Spirit to guide me each day, so that I not only avoid what displeases God but also actively show His love through kind and selfless actions toward those in need?
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். சங்கீதம் 37:27.
நம்முடைய வாழ்க்கை நமக்குள்ளே இருக்கும் தேவனுடைய பிரசன்னத்தை பிரதிபலிக்க வேண்டும். இயேசு இந்த பூமியில் நடந்தபோது, அவர் எங்கு சென்றாலும் நன்மைசெய்துகொண்டே சென்றார். அவர் ஒருபோதும் தீமையில் ஈடுபடவோ அல்லது அதில் பங்குகொள்ளவோ இல்லை. தேவனுக்கு உண்மையாகப் பயப்படுவது என்பது தீமையைவிட்டு விலகுவதேயாகும்.
நாம் இரட்சிப்பைப் பெற்றபோது, தேவன் கிருபையாகப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்தார். அவர் நம்மை எல்லாச் சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி, சரியான பாதையில் இட்டுச்செல்லும் விலையேறப்பெற்ற ஈவு. தீமையை காணும்போது அதைத் தவிர்க்கப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார். அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்ட நம் மனசாட்சி, எது தவறு மற்றும் எது தேவனுக்குப் பிரியமில்லாதது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.
ஆனால் தீமையைத் தவிர்ப்பது மட்டும் போதாது. நாம் நன்மைசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். பசியுள்ளவர்கள், தாகமுள்ளவர்கள், தேவையுள்ளவர்கள், உதவியற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கு அவருடைய நன்மையைக் காட்டும்படிக்கு அநேக வாய்ப்புகளை தேவன் நம்மைச் சுற்றிலும் வைத்துள்ளார். இந்தத் தருணங்கள் மூலம், அவருடைய அன்பையும் இரக்கத்தையும் பிரதிபலிக்க அவர் நம்மை அழைக்கிறார்.
ஒவ்வொரு விதமான தீமையிலிருந்தும் நம்மைக் காக்க வேண்டும் என்றும், நம்மைச் சுற்றியுள்ள தேவைகளை இனங்கண்டு, அன்போடும் கனிவோடும் செயல்பட நம்முடைய கண்களைத் திறக்க வேண்டும் என்றும் நாம் ஜெபித்து, தேவனிடம் கேட்போமாக. நம்முடைய பரம பிதா வாக்குறுதி அளித்தபடி, நாம் தீமையைவிட்டு விலகி, நன்மைசெய்யத் தெரிந்துகொள்ளும்போது, அவர் நம்முடைய வாழ்க்கைக்குத் தம்முடைய நன்மையைக் கிரீடமாகச் சூட்டுவார், மேலும் நாம் அவருடைய பிரசன்னத்தில் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம்.
சிந்திக்க: தேவனுக்குப் பிரியமில்லாததைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், தேவையிலிருப்போருக்கு அன்பான மற்றும் தன்னலமற்ற செயல்கள் மூலம் அவருடைய அன்பைத் தீவிரமாகக் காட்டும்படி, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நாளும் என்னை வழிநடத்த நான் அனுமதிக்கிறேனா?
Very well elaborated to avoid evil and show Christs goodness through kindness and being helpful !Give us discerning spirit and wisdom to do the right lord Amen !
ReplyDelete