Blog Y3 714 - "Prayer That Pleases God"
Then you shall call, and the Lord will answer; You shall cry, and He will say, ‘Here I am.’ If you take away the yoke from your midst, the pointing of the finger, and speaking wickedness. Isaiah 58:9.
When we read the earlier verses of this chapter, we understand that the Lord is speaking about true fasting and prayer. Let us take time to read and meditate on them as well. God teaches us how to observe fasting in the way that pleases Him. When we follow His instructions with a sincere heart, our lives will flourish, and His blessings will overflow.
At that time, when we call upon Him, our Heavenly Father will surely answer, for He is always waiting for our cry and ready to respond. And when He answers, it will be swift, loving, and powerful.
Our Father God also reminds us not to accuse, condemn, or speak harshly against anyone. We do not know the paths others are walking or the burdens they carry. Therefore, we should avoid placing heavy yokes upon others, whether by our actions or our words. Let us stop hurting people through criticism or careless speech. Instead, let us show understanding, compassion, and empathy, remembering that they, too, have souls that feel sorrow and pain.
If we live this way, removing the yoke, refraining from judgment, and speaking with grace, then surely our Father God will hear and answer our prayers without delay.
Reflection: Am I praying and fasting with a sincere heart, speaking with grace instead of criticism, and showing compassion toward others so that my Heavenly Father may hear and answer me without delay?
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, சங்கீதம் 58:9.
இந்த அதிகாரத்தின் முந்தைய வசனங்களைப் படிக்கும்போது, கர்த்தர் உண்மையான உபவாசத்தையும் ஜெபத்தையும் குறித்துப் பேசுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நாம் அவற்றை வாசிக்கவும் தியானிக்கவும் நேரம் எடுத்துக்கொள்வோம். அவருக்குப் பிரியமான விதத்தில் உபவாசத்தை அனுசரிப்பது எப்படி என்று தேவன் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவருடைய கட்டளைகளை நாம் உண்மையான இருதயத்துடன் பின்பற்றும் போது, நம்முடைய வாழ்க்கையில் செழிப்பு உண்டாகும், அவருடைய ஆசீர்வாதங்கள் பெருகும்.
அப்பொழுது, நாம் அவரை நோக்கி கூப்பிடும்போது, நம்முடைய பரம பிதா நிச்சயமாகப் பதில் தருவார், ஏனென்றால் அவர் எப்போதும் நம்முடைய கூபிடுதலுக்காகக் காத்திருக்கிறார், பதிலளிக்கத் தயாராக இருக்கிறார். மேலும் அவர் பதிலளிக்கும்போது, அது உடனடியானதாகவும், அன்பானதாகவும், வல்லமைமிக்கதாகவும் இருக்கும்.
நம்முடைய பிதாவாகிய தேவன் யாரையும் குற்றம் சாட்டவோ, கண்டனம் செய்யவோ அல்லது கடுமையாகப் பேசவோ கூடாது என்றும் நமக்கு நினைவூட்டுகிறார். மற்றவர்கள் கடந்து செல்லும் பாதைகளை அல்லது அவர்கள் சுமக்கும் பாரங்களை நாம் அறியோம். எனவே, நம்முடைய செயல்கள் அல்லது நம்முடைய வார்த்தைகளால் மற்றவர்கள்மீது கனமான நுகங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். விமரிசனம் மூலமாகவோ அல்லது கவனக்குறைவான பேச்சு மூலமாகவோ மக்களைத் துன்புறுத்துவதை நிறுத்துவோம். அதற்குப் பதிலாக, அவர்களுக்கும் துக்கத்தையும் வேதனையையும் உணரும் ஆத்துமாக்கள் உண்டு என்பதை நினைவில் வைத்து, நாம் புரிந்துகொள்ளுதலையும், இரக்கத்தையும், அனுதாபத்தையும் காட்டுவோம்.
நாம் இந்த விதத்தில் வாழ்ந்தால், அதாவது நுகத்தை அகற்றி, நியாயந்தீர்ப்பதைத் தவிர்த்து, கிருபையுடன் பேசினால், நம்முடைய பிதாவாகிய தேவன் தாமதமின்றி நம்முடைய ஜெபங்களைக் கேட்டுப் பதில் அளிப்பார் என்பது நிச்சயம்.
சிந்திக்க: என் பரம பிதா தாமதமின்றி என் ஜெபத்தைக் கேட்டுப் பதிலளிக்க, நான் உண்மையான இருதயத்தோடு ஜெபம் பண்ணி உபவாசித்து, விமரிசனத்திற்குப் பதிலாக இரக்கத்தோடு பேசி, மற்றவர்களிடம் இரக்கம் காட்டுகிறேனா?

Teach us lord the discernment and speak with compassion and empathy. Amen !!
ReplyDelete