Blog Y3 717 - "Blessing Through Obedient Love"

Praise the Lord! Blessed is the man who fears the Lord, who delights greatly in His commandments. His descendants will be mighty on earth; The generation of the upright will be blessed.” Psalms 112:1–2.

Yes, we must praise God, for He is righteous in all His ways. When a person truly fears the Lord, obedience naturally follows. If we truly love God and understand who our Heavenly Father is, we will love Him deeply and obey His commandments with reverent fear. Our fear of God and our obedience to Him reveal the depth of our love for Him.

When we walk in this loving obedience, the blessings God has stored for His people will flow into our lives. He not only blesses us, but He also blesses our generations to come. Our children and their children will be mighty, influential, and honored in this world. They will experience God’s favor. Through our faithfulness, our descendants will inherit blessings, and they too will learn to love, fear, and obey the Lord and His commandments.

Reflection: Am I truly walking in loving obedience, where I willingly align my choices, attitudes, and actions with what honors my Father, recognizing that my devotion today shapes not only my life but the generations that follow me?

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். சங்கீதம் 112:1-2.

ஆம், நாம் தேவனைத் துதிக்க வேண்டும், ஏனெனில் அவர் தம்முடைய வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவர். ஒரு நபர் உண்மையாகவே கர்த்தருக்குப் பயப்படும்போது, கீழ்ப்படிதல் இயல்பாகவே பின்தொடரும். நாம் உண்மையாகவே தேவனை நேசித்து, நம்முடைய பரம பிதா யார் என்பதைப் புரிந்துகொண்டால், நாம் அவரை ஆழமாக நேசிப்போம், மேலும் அவருடைய கட்டளைகளுக்கு பயபக்தியான பயத்துடன் கீழ்ப்படிவோம். நம்முடைய தேவன் மீதான பயமும், அவருக்கு நாம் கீழ்ப்படிவதும் நாம் அவர்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் இந்த அன்பான கீழ்ப்படிதலில் நடக்கும்போது, தேவன் தம் பிள்ளைகளுக்காகச் சேமித்து வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் நம் வாழ்க்கையில் நிறைவேறும். அவர் நம்மை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்கால சந்ததியினரையும் ஆசீர்வதிக்கிறார். நம்முடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்த உலகில் வல்லமையுள்ளவர்களாகவும், செல்வாக்குள்ளவர்களாகவும், கனம் பண்ணப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தேவனுடைய தயவை அனுபவிப்பார்கள். நம்முடைய விசுவாசத்தின் மூலம், நம் சந்ததியினர் ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பார்கள், மேலும் அவர்களும் கர்த்தரையும் அவருடைய கட்டளைகளையும் நேசிக்கவும், பயப்படவும், கீழ்ப்படியவும் கற்றுக்கொள்வார்கள்.

சிந்தனை: என் பிதாவை கௌரவிக்கும் வழியில், என் முடிவுகள், என் எண்ணங்கள், என் செயல்கள் அன்புடன் கூடிய  கீழ்ப்படிதலுடன்  ஒருமித்து செயல்படுகிறதா? இன்று நான் காட்டும் விசுவாசம், என் வாழ்வையும் எனக்கு பின்தொடரும் தலைமுறைகளையும் உருவாக்குகிறது என்பதை உணருகிறேனா?

 

Comments

  1. Yes Lord ..We obey your commandments and seen in retrospect how generations of generations were blessed !!
    We look up to you with reverence lord to bless us and our children.Amen !!

    ReplyDelete
  2. Yes it's true 👍

    ReplyDelete
  3. ஆசீர்வாதங்களிலேயே சிறந்த ஆசீர்வாதம் நம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதும் அவர்களோடு தேவனைத்துதிப்பதும் தான்! நன்றி இயேசுவே!!

    ReplyDelete
    Replies
    1. ஆமேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"