Blog Y3 720 - "Living in Eternal Victory"
But thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ. 1 Corinthians 15:57.
We are eagerly waiting for the return of our Lord. Our lives must be prepared to meet Him. That glorious day will reveal the whole truth, that death has no power over us. Many times, we use this verse to talk about victory in our worldly situations, but the true meaning of this verse is far deeper. It speaks about the victory God has given us over sin, guilt, and death.
So many people struggle with the fear of sin, guilt, and even death. But our God has already conquered them. We are under grace, and sin cannot rule over us. We do not belong to this world; our citizenship is in Heaven. Because of this, we can continually sing praises to God, who has overcome the world on our behalf.
Whenever we feel like giving up, whenever fear tries to rise within us, we can confidently confess this verse with faith: “Thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ!” Yes, He will certainly give us victory in every challenge, trial, and trouble in this world, because we belong to Him.
Reflection: Am I embracing the victory Christ has already won for me, trusting that I am no longer ruled by fear or guilt, and walking each day with confidence that my life belongs to Him alone?
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1 கொரிந்தியர் 15:57.
நம்முடைய கர்த்தரின் வருகைக்காக நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். அவரைச் சந்திக்க நம்முடைய வாழ்க்கைத் தயாராக இருக்க வேண்டும். அந்த மகிமையுள்ள நாள், மரணத்திற்கு நம்மேல் எந்த அதிகாரமும் இல்லை என்ற முழு உண்மையையும் வெளிப்படுத்தும். உலகப்பிரகாரமான நம்முடைய சூழ்நிலைகளில் கிடைக்கும் வெற்றியைப் பற்றி பேச நாம் பல நேரங்களில் இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இந்த வசனத்தின் உண்மையான பொருள் மிகவும் ஆழமானது. பாவம், குற்ற உணர்ச்சி மற்றும் மரணத்தின் மீது தேவன் நமக்கு அளித்திருக்கும் வெற்றியைக் குறித்து இது பேசுகிறது.
பாவம், குற்ற உணர்ச்சி, மற்றும் மரணத்தின் பயத்தினால் ஏராளமான மக்கள் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தேவன் இவைகளை ஏற்கனவே வெற்றி கொண்டுவிட்டார். நாம் கிருபையின் கீழ் இருக்கிறோம், பாவமானது நம்மை ஆள முடியாது. நாம் இந்த உலகைச் சேர்ந்தவர்கள் அல்ல; நம்முடைய குடியுரிமை பரலோகத்தில் உள்ளது. இதனால்தான், நமக்காக உலகை வென்ற தேவனை நாம் தொடர்ந்து துதித்துப் பாட முடியும்.
நாம் தளர்ந்து போகும்போதெல்லாம், பயம் நம்முள்ளே எழும்ப முயற்சிக்கும்போதெல்லாம், நாம் இந்த வசனத்தை விசுவாசத்துடன் தைரியமாக அறிக்கை செய்யலாம்: "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்!" ஆம், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதால், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு சவாலிலும், சோதனையிலும், உபத்திரவத்திலும் அவர் நிச்சயமாக நமக்கு வெற்றியைத் தருவார்.
சிந்திக்க: என்னுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்கே சொந்தமானது என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் நடந்து, நான் இனி பயத்தினாலோ அல்லது குற்ற உணர்ச்சியினாலோ ஆளப்படவில்லை என்று நம்பி, கிறிஸ்து எனக்காக ஏற்கெனவே பெற்ற வெற்றியை நான் ஏற்றுக்கொள்கிறேனா?

This is high level faith.
ReplyDeleteAmen
ReplyDeleteThe manifold reasons why Gos sent his son into the world 1)ahead of came into the world lived as a human being and conquered the world by showing us how to live 2) to fulfill the prophesy made my Isaiah in Old Testament 3)to be with and show miracles and go only when holyspirit,the helper will come to us to lead us !
ReplyDelete