Blog Y3 736 - "Strengthened for Every Step"
He makes my feet like the feet of deer, and sets me on my high places. Psalm 18:33.
Our feet may be weak, and at times we may stumble. But our Father God gives us a powerful promise: He Himself will strengthen our feet like the feet of a deer.
A deer’s feet are unique; its hooves are specially designed for running fast, leaping high, and moving quietly through the forest. Each hoof is split into two parts, giving the deer perfect balance even on uneven, rocky, or dangerous places. Their strong, pointed hooves allow them to escape predators quickly, and the two-part structure gives them an excellent grip, enabling them to stand firm where other animals would slip.
God gives us the strength to overcome obstacles. He enables us to stand firm in difficult and unstable places. We will not fall emotionally, mentally, or spiritually. Fear will not push us down, because His grace holds us up. He gives us the speed to escape temptation. He gives us discernment to avoid Satan’s traps. He gives us wisdom to move quickly when the Holy Spirit leads.
When we understand this promise, it amazes us! We truly have an awesome Father God who is strengthening us, guiding us, and lifting us to higher places.
He makes our feet like the feet of deer, steady, strong, graceful, and victorious.
Reflection: Am I trusting God to steady my steps and strengthen my walk, allowing His grace to help me stand firm and move wisely through every challenge I face?
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். சங்கீதம் 18:33
நம்முடைய கால்கள் பலவீனமாக இருக்கலாம், சில சமயங்களில் நாம் இடறவும் செய்யலாம். ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு ஒரு வல்லமையுள்ள வாக்குறுதியை அளிக்கிறார்: அவர் தாமே நம்முடைய கால்களைப் மானின் கால்களைப்போல பலப்படுத்துவார்.
மானின் கால்கள் தனித்துவமானவை. அது வேகமாக ஓடவும், உயரமாக தாண்டவும், காட்டு சூழலில் அமைதியாக நகரவும் வடிவமைக்கப்பட்ட சிறப்பு குளம்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குளம்பும் இரு பகுதிகளாகப் பிளந்துள்ளது; இந்த அமைப்பு சமமற்ற, கல்லுள்ள அல்லது ஆபத்தான இடங்களிலும் மானுக்கு துல்லியமான சமநிலையை அளிக்கிறது. அவற்றின் பலமான, கூர்மையான குளம்புகள் வேட்டையாடுபவர்களிடமிருந்து விரைவாகத் தப்பிச்செல்ல அனுமதிக்கின்றன, மேலும் இரண்டு பகுதிகளைக் கொண்ட அமைப்பு, மற்ற விலங்குகள் வழுக்கி விழும் இடத்திலும் உறுதியாக நிற்க உதவும் சிறந்த பிடியை அவற்றுக்குக் கொடுக்கிறது.
அதேபோல, தேவன் நமக்குத் தடைகளை ஜெயிக்க வல்லமை அளிக்கிறார். நிலை தடுமாறும் சூழல்களிலும் நம்மை உறுதியாக நிற்கச் செய்கிறார். மனதிலும், சிந்தனையிலும், ஆவியிலும் நாம் விழாமல் காப்பாற்றுகிறார். அவருடைய கிருபை நம்மைத் தாங்குவதால், பயம் நம்மைத் தள்ளிவிடாது. சோதனையிலிருந்து தப்பிக்க அவர் நமக்கு வேகத்தைக் கொடுக்கிறார். சாத்தானின் கண்ணிகளைத் தவிர்க்க அவர் நமக்கு விவேகத்தைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் போது விரைவாகச் செயல்பட அவர் நமக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்.
நாம் இந்த வாக்குறுதியைப் புரிந்துகொள்ளும்போது, அது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது! நம்மைப் பலப்படுத்தி, வழிநடத்தி, உயர்ந்த இடங்களுக்கு உயர்த்துகிற ஒரு அற்புதமான பிதாவாகிய தேவன் நமக்கு உண்மையிலேயே இருக்கிறார். அவர் நம்முடைய கால்களைப் மானின் கால்களைப்போல உறுதியானதாகவும், பலமானதாகவும், நேர்த்தியானதாகவும், வெற்றியுள்ளதாகவும் ஆக்குகிறார்.
சிந்தனை: நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும் அவருடைய கிருபை எனக்கு உறுதியாக நிற்கவும், ஞானமாக நகரவும் உதவும் என்று நம்பி, என் அடிகளை நிலைப்படுத்தவும் என் நடையைப் பலப்படுத்தவும் தேவனை நம்பியிருக்கிறேனா?

Habakkuk 3:17-19
ReplyDelete17 Though the fig tree does not bud
and there are no grapes on the vines,
though the olive crop fails
and the fields produce no food,
though there are no sheep in the pen
and no cattle in the stalls,
18 yet I will rejoice in the Lord,
I will be joyful in God my Savior.
19 The Sovereign Lord is my strength;
he makes my feet like the feet of a deer,
he enables me to tread on the heights.
Haggai 2:19
19 Is there yet any seed left in the barn? Until now, the vine and the fig tree, the pomegranate and the olive tree have not borne fruit. “ ‘From this day on I will bless you.’ ”
Both the verses begin similarly but end differently in Habakkuk where the prophet Habakkuk still believes in faith although tested that his foot will be surefooted as the 🦌 deer!
While in Haggai receives a promise that from now on You will be blessed!!
Thank you brother for uplifting us with this promise today. 🙏
ReplyDelete