Blog Y3 756 - "All Glory Belongs to God"
What is man, that You should exalt him, That You should set Your heart on him, That You should visit him every morning, And test him every moment? Job 7:17–18.
We are human beings, formed from the dust of the earth. We have nothing of our own to boast about. All glory, honor, and exaltation belong to God alone. Everything we have, our life, strength, blessings, and opportunities, comes only from His grace. Nothing in our lives happens by chance; everything belongs to Him and flows from His mighty and holy hand.
Our God is holy, mighty, and marvelous. He dwells in unapproachable light and is continually praised by multitudes of angels. Yet, in His unfathomable love, He still cares for us. He visits us daily, watches over us every moment, and lovingly concerns Himself with our lives. Though we are nothing apart from Him, He chose to love us. He was not satisfied with the praise of angels alone; He desires us to be with Him, to worship Him, and to glorify Him.
So great is the love that He sent His only begotten Son, Jesus Christ, to redeem us and bring us into His heavenly presence. He wants us to live filled with His presence even now, not broken, rejected, or forgotten, but chosen for His divine purpose. What a mighty, wonderful, and loving God we have! Let us be deeply grateful every moment of our lives, remembering that His eyes are always upon us. May all glory, honor, and praise be to God alone, now and forever.
Reflection: Am I living with continual gratitude, remembering that every gift, strength, and opportunity comes from Him alone, and choosing to honor Him with humility, worship, and wholehearted dependence each day?
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? யோபு 7:17–18.
நாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதர்கள். நாம் பெருமை பாராட்டுவதற்கு நம்மிடம் சொந்தமாக எதுவுமில்லை. எல்லா மகிமையும், கனமும், துதியும் தேவனுக்கு மட்டுமே உரியது. நம்மிடம் உள்ள அனைத்தும்; நமது உயிர், பலம், ஆசீர்வாதங்கள் மற்றும் வாய்ப்புகள், அவருடைய கிருபையினால் மட்டுமே வந்தவை. நம் வாழ்வில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை; அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை மற்றும் அவருடைய வல்லமையுள்ள, பரிசுத்த கரத்திலிருந்தே வருகின்றன.
நம்முடைய தேவன் பரிசுத்தமானவர், வல்லமையுள்ளவர் மற்றும் அற்புதமானவர். அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறார், மேலும் திரளான தேவதூதர்களால் அவர் இடைவிடாது துதிக்கப்படுகிறார். இருப்பினும், அவருடைய அளவிட முடியாத அன்பினால், அவர் இன்னும் நம்மேல் அக்கரை கொள்கிறார். அவர் நாள்தோறும் நம்மைச் சந்திக்கிறார், ஒவ்வொரு கணமும் நம்மைப் பாதுகாக்கிறார், மேலும் அன்புடன் நம் வாழ்வைப் பற்றிய கவலை கொள்கிறார். அவர் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை என்றாலும், அவர் நம்மை நேசிக்கத் தேர்ந்தெடுத்தார். தேவதூதர்களின் துதியினால் மட்டும் அவர் திருப்தியடையவில்லை; நாம் அவரோடு இருக்கவும், அவரை ஆராதிக்கவும், அவரை மகிமைப்படுத்தவும் அவர் விரும்புகிறார்.
அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்மை மீட்கவும், தம்முடைய பரலோக பிரசன்னத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லவும் அனுப்பும் அளவுக்கு அன்பு கூர்ந்தார். இப்போதும் கூட நாம் அவருடைய பிரசன்னத்தினால் நிறைந்து வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நாம் உடைந்தவர்களாகவோ, நிராகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது மறக்கப்பட்டவர்களாகவோ இருக்காமல், அவருடைய தெய்வீக நோக்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வல்லமையுள்ள, அற்புதமான மற்றும் அன்பான தேவன் நமக்கு இருக்கிறார்! அவருடைய கண்கள் எப்போதும் நம் மீது இருப்பதை நினைவில் கொண்டு, நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் மிகுந்த நன்றியுணர்வுடன் இருப்போமாக. சகல மகிமையும், கனமும், துதியும் இப்போதும் என்றென்றைக்கும் தேவனுக்கு மட்டுமே உண்டாவதாக.
சிந்திக்க: ஒவ்வொரு ஈவும், பலமும், வாய்ப்பும் அவரிடமிருந்து மட்டுமே வருகிறது என்பதை நினைவில் கொண்டு, நான் இடைவிடாத நன்றியுணர்வுடன் வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் தாழ்மையுடன் ஆராதித்து முழுமையான நம்பிக்கையுடன் அவரை மகிமைப்படுத்துகிறேனா?

Comments
Post a Comment