You crown the year with Your goodness, and Your paths drip with abundance. Psalm 65:11.
All glory and honor belong to our loving Father God alone. As we step into the New Year 2026, we receive this as one of the richest promises given to us. The blessings that come from people in this world may not always flow from a sincere heart, but our Lord God blesses us from the very depths of His loving heart.
Truly, this year will be marvelous and meaningful in our lives. Yes, the Lord will crown 2026 with His riches, glory, goodness, and mercy. Even as we walk through difficult and challenging paths, His peaceful presence will go with us wherever we go. The Lord Himself will walk beside us, and through our lives we will spread the fragrance of Christ.
As we walk with Him, our paths will drip with abundance and overflow with blessings. Our God does not measure His blessings in limitation; He blesses us far beyond what this world can ever give. With this confidence and assurance, let us move forward joyfully and fully enjoy the abundant blessings of our faithful God.
Reflection: Am I entering the New Year with confident trust, choosing to walk closely with Him, expecting His generous favor, steady presence, and overflowing provision to shape my steps and testimony throughout the days ahead?
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. சங்கீதம் 65:11.
எல்லா மகிமையும் கனமும் நம்முடைய அன்புள்ள பிதாவாகிய தேவனுக்கே உரியது. நாம் 2026-ஆம் புதிய ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கும்போது, நமக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் மேன்மையான வாக்குறுதிகளில் ஒன்றாக இதை நாம் பெற்றுக்கொள்கிறோம். இவ்வுலகில் மனிதர்களிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்மையான இருதயத்திலிருந்து வருவதில்லை, ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது அன்புள்ள இருதயத்தின் ஆழத்திலிருந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.
உண்மையாகவே, இந்த ஆண்டு நமது வாழ்க்கையில் அற்புதமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். ஆம், கர்த்தர் 2026-ஆம் ஆண்டைத் தமது ஐசுவரியம், மகிமை, நன்மை மற்றும் கிருபையினால் முடிசூட்டுவார். நாம் கடினமான மற்றும் சவாலான பாதைகளில் நடந்தாலும், அவருடைய அமைதி நிறைந்த பிரசன்னம் நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு வரும். கர்த்தர் தாமே நம் அருகில் நடப்பார், நமது வாழ்வின் மூலம் கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் பரப்புவோம்.
நாம் அவரோடு நடக்கும்போது, நமது பாதைகள் செழிப்பாய்ப் மாறும், மற்றும் ஆசீர்வாதங்களால் நிரம்பி வழியும். நமது தேவன் தமது ஆசீர்வாதங்களை அளந்து கொடுப்பதில்லை; இந்த உலகம் கொடுக்கக்கூடியதைக் காட்டிலும் மேலான விதத்தில் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும், நாம் மகிழ்ச்சியுடன் முன்னோக்கிச் செல்வோம், நமது உண்மையுள்ள தேவனின் ஏராளமான ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்போம்.
சிந்தனை: வரப்போகும் நாட்களில் எனது ஒவ்வொரு அடியையும், எனது சாட்சியையும் வடிவமைக்க அவருடைய தாராளமான தயவு, நிலையான பிரசன்னம் மற்றும் குறைவற்ற பராமரிப்பை நான் எதிர்பார்த்து, நான் இந்தப்புதிய ஆண்டிற்குள் முழு நம்பிக்கையுடன், அவரோடு நெருக்கமாக நடக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன் நுழைகிறேனா?
🙏 Amen
ReplyDeleteYes lord ,you crowned this year 2025 with grace and salvation. Without your providence we could let have made it to 2026 .
ReplyDeleteThank you lord for your supernatural providence ! Amen