Remember these, O Jacob, and Israel, for you are My servant; I have formed you, you are My servant; O Israel, you will not be forgotten by Me! Isaiah 44:21.
The world may not think about us or remember us. The Bible even says that a mother may forget her child. But our Heavenly Father gives us this unshakable promise: we will not be forgotten by Him. We are always in His thoughts.
When we go through difficult situations, we may feel completely alone. But no, that is the very moment when God carries us on His shoulders. He walks through those situations for us and with us. He has promised that He will never leave us nor forsake us.
He alone created us in our mother’s womb. Every single part of our body was perfectly designed by Him, with care and purpose. Nothing about us is accidental.
In response to such great love, what can we give back to Him?
We are called to hold firmly to the salvation He has given us and to follow Him as our Master. Whatever He asks us to do, we choose to obey, because He has called us His servants. And being His servants means we are in this world to serve Him and bring glory to His name.
Let us always keep this truth in our hearts and minds: We are not forgotten. We are formed by God, held by God, and always in His thoughts.
Reflection: Am I living with confident trust that I am known and carried by my Creator, choosing daily obedience and wholehearted service as a grateful response to His unfailing care?
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21.
இந்த உலகம் நம்மைப் பற்றி நினைக்காமல் இருக்கலாம் அல்லது நம்மை மறந்துவிடலாம். ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று வேதாகமம் கூறுகிறது. நமது பரம பிதா நமக்கு இந்த அசைக்க முடியாத வாக்குறுதியை அளிக்கிறார்: நாம் ஒருபோதும் அவரால் மறக்கப்படுவதில்லை. நாம் எப்போதும் அவருடைய நினைவில் இருக்கிறோம்.
நாம் கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, முற்றிலும் தனிமையாக இருப்பதாக உணரலாம். ஆனால் அது உண்மை அல்ல; அந்தத் தருணத்தில்தான் தேவன் நம்மைத் தமது தோள்களில் சுமக்கிறார். அவர் அந்தச் சூழ்நிலைகளில் நமக்காகவும், நம்மோடும் கூட நடக்கிறார். அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும், நம்மை விட்டு விலகுவதில்லை என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர் ஒருவரே நம்மை நம் தாயின் கருப்பையில் உருவாக்கினார். நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் அவரால் மிகுந்த கவனத்தோடும் நோக்கத்தோடும் வடிவமைக்கப்பட்டது. நம்மைப் பற்றிய எதுவும் தற்செயலானது அல்ல.
இவ்வளவு பெரிய அன்பிற்குப் பதிலாக, நாம் அவருக்கு எதைத் திரும்பக் கொடுக்க முடியும்?
அவர் நமக்குத் தந்துள்ள இரட்சிப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், அவரை நமது எஜமானராகப் பின்பற்றவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவர் நம்மைத் தமது ஊழியர்கள் (தாசர்கள்) என்று அழைத்திருப்பதால், அவர் எதைச் செய்யச் சொன்னாலும் கீழ்ப்படிய நாம் முன்வர வேண்டும். அவருடைய ஊழியர்களாக இருப்பது என்பது, நாம் இந்த உலகத்தில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய நாமத்திற்கு மகிமை கொண்டு வரவும் இருக்கிறோம் என்பதாகும்.
இந்த உண்மையை எப்போதும் நமது இருதயத்திலும் சிந்தையிலும் வைப்போம்: நாம் மறக்கப்படுவதில்லை. நாம் தேவனால் உருவாக்கப்பட்டவர்கள், தேவனால் தாங்கப்படுபவர்கள், எப்போதும் அவருடைய நினைவில் இருப்பவர்கள்.
சிந்திக்க: தேவனுடைய குறையாத பராமரிப்பிற்கு நன்றியுள்ள பதிலளிப்பாக, ஒவ்வொரு நாளும் அவருக்குக் கீழ்ப்படிந்து, முழு இருதயத்தோடு அவருக்குச் சேவை செய்து, எனனைப் படைத்தவரால் நான் அறியப்பட்டிருக்கிறேன் மற்றும் சுமக்கப்படுகிறேன் என்கிற முழு நம்பிக்கையோடு நான் வாழ்கிறேனா?
Oh what a great promise and affirmation from the great love that we are not forgotten ! And we have a savior to look up to always.
ReplyDelete