Blog Y3 769 - "Unmatched Power at Work"

Who does great things, and unsearchable, Marvelous things without number. Job 5:9. 

Our God, who created heaven and earth, is the only true God. Nothing and no one can defeat Him. He holds the keys of death and life. He is the King of kings and the Lord of lords. Nothing is impossible for Him.

He does great and mighty things, not only in this world but also in our personal lives. The miracles He works in us are unsearchable, far beyond our thoughts and understanding. Often, we look for miracles only in outward situations, but our God works both inside and outside of us. He sees the heart, the hidden battles, and the unseen needs.

He does not need help from any human being. He alone is all-powerful. The marvelous works and wonders He performs are beyond number; we cannot even begin to count them.

He once asked Abraham to look at the stars in the sky and said, “If you are able to count them, so shall your descendants be.” In the same way, God is still working today, fulfilling His promises and blessing His children in ways beyond measure.

Therefore, we need not be discouraged or dismayed, for the One who is in us is greater than the one who is in the world. Our God is mighty, faithful, and unchanging. To Him be all glory, honor, and praise forever.

Reflection: Am I choosing to rely on Him daily, believing I am being strengthened within and around me, even when I cannot measure what is unfolding?

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.  யோபு 5:9.

வானத்தையும் பூமியையும் படைத்த நம் தேவன் ஒருவரே மெய்யான தெய்வம். எதனாலும் யாராலும் அவரைத் மேற்கொள்ள முடியாது. அவரே மரணத்திற்கும் ஜீவனுக்கும் உரிய திறவுகோல்களைக் கொண்டிருக்கிறார். அவர் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாய் இருக்கிறார். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

அவர் இந்த உலகில் மட்டுமல்ல, நமது தனிப்பட்ட வாழ்விலும் பெரிய மற்றும் வல்லமையான காரியங்களைச் செய்கிறார். அவர் நமக்குள் செய்யும் அற்புதங்கள் ஆராய்ந்து முடியாதவை, அவை நம் எண்ணங்களுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவை. பல நேரங்களில், நாம் புறம்பான சூழ்நிலைகளில் மட்டுமே அற்புதங்களை எதிர்பார்க்கிறோம், ஆனால் நம் தேவன் நமக்குள்ளும் (உள்ளத்திலும்) வெளியேயும் கிரியை செய்கிறார். அவர் இருதயத்தையும், மறைந்திருக்கும் போராட்டங்களையும், வெளியுலகிற்குத் தெரியாதவைகளையும் காண்கிறார்.

அவருக்கு எந்த மனிதருடைய உதவியும் தேவையில்லை. அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். அவர் செய்கிற ஆச்சரியமான கிரியைகளும் அதிசயங்களும் எண்ணிமுடியாதவை; அவற்றை நம்மால் கணக்கிடக்கூட முடியாது.

அவர் ஒருமுறை ஆபிரகாமை நோக்கி, வானத்து நட்சத்திரங்களை அண்ணாந்து பார்க்கச் சொல்லி, "உன்னால் அவைகளை எண்ணக்கூடுமானால் எண்ணு, உன் சந்ததி இவ்வண்ணமாகவே இருக்கும்" என்றார். அதேபோல, தேவன் இன்றும் கிரியை செய்து கொண்டிருக்கிறார், தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி, தமது பிள்ளைகளை அளவிட முடியாத வழிகளில் ஆசீர்வதிக்கிறார்.

ஆகவே, நாம் சோர்ந்து போகவோ கலங்கவோ தேவையில்லை, ஏனென்றால் உலகத்திலிருப்பவனைவிட நம்மில் இருப்பவர் பெரியவர். நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர் மற்றும் மாறாதவர். அவருக்கே என்றென்றைக்கும் மகிமையும், கனமும், துதியும் உண்டாவதாக.

சிந்திக்க:  நடக்கப்போகும் காரியங்களை என்னால் அளவிட முடியாத போதும், எனக்குள்ளும் என்னைச் சுற்றிலும் நான் பலப்படுத்தப்படுகிறேன் என்பதை நம்பி, ஒவ்வொரு நாளும் அவரைச் சார்ந்து இருக்க நான் தீர்மானிக்கிறேனா?

 

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"