Blog Y3 771 - "Trusting God's Unchanging Promises"

The One who was sitting on the throne said, ‘Look, I am making everything new!’ Then He said, ‘Write this, because these words are true and can be trusted.’ Revelation 21:5.

Our God is the sovereign God, seated on the throne. He declares with authority that He is making everything new.

When world leaders make promises, we may believe them for a moment, but they are not reliable. Their lives on this earth are uncertain. They are only human beings; they are created, not creators.

But our God is the Creator.
He is on the throne.
He is faithful.
When He makes a promise, He never changes His mind.

Today, our Father God promises that He is making everything new in our lives. Many times we think, “This is the life I must endure until my last breath.” But no,  our Father assures us that He is able to change everything.

Our part is simple yet powerful: to believe and to trust in Him.

Whatever our past or present situation may be, let us place it into the mighty hands of God, the One who makes all things new and beautiful. This is our Creator’s nature. He can make new things out of nothing.

Glory be to our sovereign God!

Reflection: Am I placing my present situations into God’s hands with confidence, choosing to rely on His faithfulness rather than assuming my situation can never truly change?

சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். வெளிப்படுத்துதல் 21:5.

நமது தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சர்வவல்லமையுள்ள தேவன். "நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" என்று அவர் அதிகாரத்துடன் பிரகடனம் செய்கிறார்.

உலகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது, நாம் அவற்றை ஒரு கணம் நம்பலாம், ஆனால் அவை நம்பிக்கைக்குரியவை அல்ல. இந்த பூமியில் அவர்களின் வாழ்க்கை நிச்சயமற்றது. அவர்கள் வெறும் மனிதர்களே; அவர்கள் படைக்கப்பட்டவர்கள், படைத்தவர்கள் அல்ல.

ஆனால் நமது தேவன் படைத்தவர் (சிருஷ்டிகர்). அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் உண்மையுள்ளவர். அவர் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது, அவர் ஒருபோதும் தன் மனதை மாற்றிக்கொள்வதில்லை.

இன்று, நம்முடைய பிதாவாகிய தேவன் நம் வாழ்வில் எல்லாவற்றையும் புதிதாக்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். பல நேரங்களில் நாம், "என் கடைசி மூச்சு வரை இந்த வாழ்க்கையை இப்படித்தான் சகித்துக்கொள்ள வேண்டும்" என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு; எல்லாவற்றையும் மாற்ற தம்மால் முடியும் என்று நம் பிதா நமக்கு உறுதி அளிக்கிறார்.

நம்முடைய பங்கு எளிமையானது, அதேசமயம் வலிமையானது: அவரை நம்புவதும் விசுவாசிப்பதும் மட்டுமே.

நமது கடந்த கால அல்லது நிகழ்கால சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அனைத்தையும் புதிதாகவும் அழகாகவும் மாற்றும் தேவனின் வல்லமையுள்ள கரங்களில் அவற்றை ஒப்படைப்போம். இதுவே நம் படைத்தவரின் இயல்பு. அவரால் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக, ஒன்றுமில்லாமையிலிருந்து புதியவற்றை உருவாக்க முடியும்.

நம்முடைய சர்வவல்லமையுள்ள தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

சிந்திக்க: என் சூழ்நிலை ஒருபோதும் மாறாது என்று நினைப்பதற்குப் பதிலாக, தேவனின் உண்மைத்தன்மையின் மேல் நம்பிக்கை வைத்து, என் நிகழ்கால சூழ்நிலைகளைத் தேவனின் கரங்களில் நம்பிக்கையோடு ஒப்படைக்கிறேனா?



 

Comments

  1. Rev 21:5 states -Write it down,I’m making everything new.
    What a significant promise where you are given new life and restoration where old is gone and new comes ,where the best of the old creation is perfected.
    A complete contrast to annihilation which the circumstances brings but God steps in with his promises and providence turning it into restoration of a new life ! What a promise Lord that you sit on the throne and say it with authority,write these words for the one who is saying is Trust worthy. We have this faith lord that makes us strong! Amen !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"