Blog Y3 782 - "The Living True God"
Blessed is the nation whose God is the Lord, the people He has chosen as His own inheritance. Psalm 33:12.
The God Jehovah, the God whom we worship, is the only true God. He is the One who created heaven and earth by His word. Our God is alive! He is not an image or an idol; He is the living God.
So often we forget to realize how great and majestic our God truly is. He is the God whom the heavenly hosts, archangels, and angels worship day and night. Yet, in all His glory, He loves us and desires our worship.
Our God is the God who walks with us and talks with us. He is deeply concerned about every detail of our lives, even the smallest things. He is our God!
Therefore, we can rejoice and shout with joy: we are a blessed people whose God is the Lord. How blessed we are that He has chosen us as His own inheritance, His treasured and special people. Truly, we are the most blessed people in this world, because the Lord is our God.
Reflection: Am I honoring and worshiping the living Creator with reverence and joy, recognizing His nearness in my daily life and responding as one truly blessed to belong to Him?
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. சங்கீதம் 33:12.
நாம் ஆராதிக்கிற யெகோவா தேவன் ஒருவரே மெய்யான தெய்வம். அவர் தமது வார்த்தையினால் வானத்தையும் பூமியையும் படைத்தவர். நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர்! அவர் ஒரு உருவமோ அல்லது சிலையோ அல்ல; அவர் உயிருள்ள தேவன்.
நம்முடைய தேவன் எவ்வளவு பெரியவர் மற்றும் மகிமையானவர் என்பதை நாம் அடிக்கடி உணர மறந்துவிடுகிறோம். அவர் பரலோக சேனைகளும், பிரதான தூதர்களும், தேவதூதர்களும் இரவும் பகலும் ஆராதிக்கிற தேவன். இவ்வளவு மகிமை நிறைந்தவராக இருந்தும், அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் நமது ஆராதனையை விரும்புகிறார்.
நம்முடைய தேவன் நம்மோடு நடக்கிறவர் மற்றும் நம்மோடு பேசுகிறவர். அவர் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தைப் பற்றியும், மிகச்சிறிய காரியங்களைக்கூட மிகவும் அக்கறையுடன் கவனிக்கிறவர். அவரே நம்முடைய தேவன்!
எனவே, நாம் மகிழ்ச்சியடைந்து ஆனந்த சத்தமிடுவோம்: கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட நாம் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள். அவர் நம்மைத் தமக்குச் சொந்தச் சுதந்தரமாகவும், தமக்குரிய விசேஷித்த ஜனங்களாகவும் தெரிந்துகொண்டது எவ்வளவு பெரிய பாக்கியம். கர்த்தரே நம்முடைய தேவனாயிருப்பதால், மெய்யாகவே இந்த உலகத்தில் நாமே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள்.
சிந்திக்க: தினசரி வாழ்க்கையில், எல்லாவற்றையும் படைத்த தேவனின் நெருக்கத்தை உணர்ந்து, அவருக்குரிய பயபக்தியோடும் மகிழ்ச்சியோடும் அவரை நான் கனப்படுத்தி, அவருக்குச் சொந்தமானவன் என்கிற பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டதற்குத் தக்கபடி நான் நடக்கிறேனா?

Lord your glory is declared through the word. Your power is seen in the creation as Acts 14:17 states -
ReplyDeleteYet he has not left himself without testimony: He has shown kindness by giving you rain from heaven and crops in their seasons; he provides you with plenty of food and fills your hearts with joy."
You have chosen us as your own inheritance and you delight in blessing us .
We have this treasure that supreme power belongs to you lord ,that those who follow your precepts will always be blessed!