O Lord, You have searched me and known me. You know my sitting down and my rising up; You understand my thought afar off. You comprehend my path and my lying down, and are acquainted with all my ways. Psalms 139:1-3.
This Psalm reveals the profound care of our loving God, the Creator of heaven and earth. He is intimately involved in the minute details of our lives. He knows our every move, our every thought, past, present, and future. In the same way, He is acquainted with all our words, actions, and every corner of our being. We can hide nothing from our loving Father.
His coming is not far away. The prophecies and signs foretold in the Bible are being fulfilled in our time. Ours may be the last generation. Therefore, let the Psalmist’s prayer guide every moment, “Search me, O God! Look deep within my heart and reveal anything in me that grieves You.”
Our God is deeply concerned with all that we are. Even our deepest sighs do not escape Him; He knows our heart’s agony and tenderly cares for us. May His Word be our daily food and His presence the living water that sustains us in every area of our lives.
Reflection: Am I inviting God to examine my inner motives and reveal what needs change, so I remain fully surrendered, transparent, and nourished by His presence every day?
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். சங்கீதம் 139:1–3.
இந்தச் சங்கீதம் வானத்தையும் பூமியையும் படைத்த நம்முடைய அன்பான தேவன் நம்மேல் வைத்திருக்கும் ஆழமான அக்கறையை வெளிப்படுத்துகிறது. அவர் நம் வாழ்வின் மிகச்சிறிய விவரங்களிலும் நெருக்கமானத் தொடர்பு கொண்டிருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும், எண்ணத்தையும்—கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் அவர் அறிவார். அதேபோல, நம்முடைய எல்லா வார்த்தைகளையும், செயல்களையும், நம்முடைய ஒவ்வொரு முக்கியமானவற்றையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். நம்முடைய அன்பான பிதாவிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது.
அவருடைய வருகை வெகு தொலைவில் இல்லை. வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களும் அடையாளங்களும் நம் காலத்தில் நிறைவேறி வருகின்றன. நாம் ஒருவேளை கடைசித் தலைமுறையாக இருக்கலாம். எனவே, சங்கீதக்காரனின் இந்த ஜெபம் ஒவ்வொரு கணமும் நம்மை வழிநடத்தட்டும்: "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; எனக்குள் வேதனையுண்டாக்கும் வழி ஏதாகிலும் உண்டோ என்று பார்த்து, என்னை நித்திய வழியிலே நடத்தும்."
நம்முடைய தேவன் நாம் யாராக இருக்கிறோம் என்பதில் ஆழமான அக்கறை கொண்டுள்ளார். நம்முடைய ஆழமான பெருமூச்சுகள்கூட அவரிடமிருந்து தப்புவதில்லை; அவர் நம் இருதயத்தின் வேதனையை அறிந்து, நம்மை மென்மையாகப் பராமரிக்கிறார். அவருடைய வார்த்தை நமது அன்றாட உணவாகவும், அவருடைய பிரசன்னம் நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தாங்கும் ஜீவத் தண்ணீராகவும் இருப்பதாக.
சிந்திக்க: நான் ஒவ்வொரு நாளும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து, ஒளிவு மறைவின்றி நடந்து, அவருடைய பிரசன்னத்தினால் போஷிக்கப்பட்டு, என்னுடைய உள்ளான நோக்கங்களை ஆராய்ந்து, மாற்றப்பட வேண்டியவற்றை வெளிப்படுத்தும்படி நான் தேவனிடம் வேண்டுகிறேனா?
He is acquainted with all our words, actions, and every corner of our being. We can hide nothing from our loving Father.Yes lord ,you know our heart. Lead us lord for your word is our word and your presence is living water .Amen !!
ReplyDelete